ikaas

ikaas Food Salt, Free Flow, Crystal Salt, Table Salt, Natural Salt. This are all wholesale.

Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!        உணவின் மூலப்பொருளாக வி...
01/10/2024

Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!

உணவின் மூலப்பொருளாக விளங்கும் உப்பு உணவிற்கு சுவையூட்டுவதுடன், உடலுக்கு நன்மை தருபவையாகவும் அமைகின்றன. உப்பு சமையலில் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. அதிலும் கல் உப்பு உடலுக்குத் தேவையான பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இது பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கல் உப்பு ஆனது, பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே காணப்படும். இருப்பினும், இது ஊதா, ஆரஞ்சு, சிவப்பு, சாம்பல் அல்லது வெளிர் நீலம் போன்ற நிறங்களில் வேறுபடலாம்.

பொதுவாக கல் உப்பு அதிக செறிவு கொண்ட தூய வடிவமாக உள்ளது. இது சாதாரண உப்பைப் போல சுத்திகரிக்கப்படாமல், தூய்மையான படிக வடிவத்தில் கிடைக்கக் கூடியதாகும். உப்பு சுத்திகரிப்பு செயல்பாடுகளில், நனைவதைத் தடுப்பதற்காக பல்வேறு தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், கல் உப்பு சுத்திகரிக்கப்படுவதில்லை என்பதால் இதில் எந்த வித இரசாயனங்களும் கலக்கப்படவில்லை. மேலும், இதனால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை.

கல் உப்பின் நன்மைகள்
கல் உப்பில் கால்சியம், மக்னீசியம், சோடியம் குளோரைடு, சல்பர், ஆக்ஸிஜன், கோபால்ட் போன்ற பல நுண்ணூட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. எனவே இது உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. மேலும், உடலை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் கல் உப்பு தரும் சில ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
கல் உப்பில் வைட்டமின் கே சத்து நிறைந்துள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, எலும்பு வலுபெற உதவுகிறது. இதனுடன், எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. பல்வேறு நோய்கள் உண்டாவதைத் தடுக்கிறது.

தொண்டைப் புண் குணமாக
சளி, இருமல் வரும் சமயத்தில் தொண்டை புண்ணால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இந்த சமயத்தில், தொண்டைப் புண்ணைக் குணப்படுத்த உப்பு நீரானது இயற்கையான வீட்டு வைத்தியமாகச் செயல்படுகிறது. உப்பு நீரால் தொண்டை வரை நனைத்து வாய் கொப்பளிக்கும் போது தொண்டை புண் ஆறி விடும். இது நுரையீரல் திறனை அதிகரிக்க உதவும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

சரும ஆரோக்கியத்திற்காக
ஆயுர்வேத முறைப்படி, கல் உப்பு சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. தோல் திசுக்களை சுத்தப்படுத்துவதுடன், வலுப்படுத்தவும், புத்துணர்ச்சியூட்டவும் உதவுகிறது.

கல் உப்பு முடி பராமரிப்பிலும் பங்கு வகிக்கிறது. இது முடியில் உள்ள அழுக்குகளை அகற்றுவது முடி உதிர்வையும் தடுக்க உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க
அமைதியற்ற நிலையை அடையும் போது, சிறிதளவு கல் உப்பை நீரில் கலந்து குளிக்கும் போது அல்லது உட்கொள்ளும் போது மன அழுத்தம் குறைவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது மூளையை நன்றாக செயல்படுத்த உதவுகிறது.

செரிமானத்திற்கு கல் உப்பு
கல் உப்பில் தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கல் உப்பு தீர்வாக அமைகிறது. குடலில் உள்ள நச்சுப் பொருள்களை சுத்தப்படுத்தி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், கல் உப்பானது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

Natural salt
01/10/2024

Natural salt

Address

Tuticorin
628005

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ikaas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share