Vaddakkachchi Puluthiyaru Farm

Vaddakkachchi Puluthiyaru Farm Vaddakkachchi Puluthi Aru Farm

13/11/2025
06/11/2025
மிளகாய் சாகுபடியில் காய்த்துளைப்பாணை கட்டுப்படுத்தும் முறைமிளகாயில் காய்த்துளைப்பாணை கட்டுப்படுத்த பிவேரியா ஒரு லிட்டர் ...
02/11/2025

மிளகாய் சாகுபடியில் காய்த்துளைப்பாணை கட்டுப்படுத்தும் முறை

மிளகாயில் காய்த்துளைப்பாணை கட்டுப்படுத்த பிவேரியா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கலாம்

மிளகாயில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த
டிரைக்கோடெர்மா விரிடி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தண்ணீர் பாயும் பொழுது ஊற்றி விடலாம் அல்லது 100 கிலோ தொழுவுரம் அல்லது மண்புழு உரத்தில் கலந்து வயலில் ஈரமாக இருக்கும் பொழுது போடலாம்

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலின் பயன்கள்
25 சதவீதம் பயிர் ஊக்கியாகவும், 75 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது

இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பாகும்.
இந்தகரைசலின் காரமான நெடியின் காரணமாக பூச்சிகள் பயிர்களை உண்ணாது

பூச்சிகள் முட்டையிடுவது தடுக்கப்படும்
பூச்சி விரட்டியாகவும், பூஞ்சாண கொல்லியாகவும் பயன்படுத்தலாம்.

புழுக்களை கட்டுப்படுத்தும்
பழமரங்களைத் தாக்கும் புழுக்கள், வண்டுகளை அழிக்கும்

பூண்டு எண்ணை பயிருக்கு சத்துக்களை அளிக்கும்
சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் இருக்காது
நெல்லில் குலைநோய், பாக்டீரியா வாடல் நோய்களை கட்டுப்படுத்ததும்.

சுற்று சூழலை பாதிப்பு ஏற்படுத்தாத பாதுகாப்பான பூச்சி கொல்லியாகும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

ஒரு கிலோ பூண்டு
அரைக்கிலோ இஞ்சி,
அரைக்கிலோ பச்சை மிளகாய்

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தயாரிக்கும் முறை

பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை தனித்தனியாக அரைத்து 7 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலைவேளையில் பயிருக்கு தெளிக்கலாம்

பயன்படுத்தும் பொருட்களின் செயல்பாடு
பூண்டு - அலிசின் என்ற வேதிப்பொருள் உள்ளது -இது பூச்சிகளை கட்டுப்படுத்தும்

பூஞ்சாணங்களை வளர விடாது – எரிப்பு தன்மை உள்ளது பயிருக்க சத்துபொருளாகவும் பயன்படும்
இஞ்சி

பச்சை மற்றும் காய்ந்த இஞ்சி தாவர பூச்சி கொல்லியாக செயல்படும்

வெள்ளை ஈ, அசுவிணி, காய்ப்புழு இவற்றை உண்ணாவிடாது தடுக்கும் ஆற்றல் உண்டு
நூற்புழு, பூஞ்சாண கொல்லியாக பயன்படும்.
பயிர்கள் சேமிக்கும் போது இவற்றின் வாசனையை வைத்து பயறு வண்டுகள்

வரவிடாமல் தடுக்கும்
பூஞ்சாணங்களை வளர விடாது
இலைப்புள்ளி நோய், குலைநோய், மஞ்சள் தேமல் நோய், பாக்டீரியா வாடல் நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது.

பச்சை மிளகாய்
பச்சை மிளகாயில் உள்ள காரத்தைன்மை பூச்சிகளுக்கு சாப்பிடவிடாமல் எரிச்சலை உண்டுபண்ணி தடுக்கும் முட்டைகள் இடுவது தடைபடும்
பயன்படுத்தும் பயிர்கள்

அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் அளவு

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வெளையில் தெளிக்க வேண்டும்.

01/11/2025
27/10/2025

Address

Kilinochchi

Alerts

Be the first to know and let us send you an email when Vaddakkachchi Puluthiyaru Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaddakkachchi Puluthiyaru Farm:

Share

Category