01/03/2026
🐐🌶️ ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி
🧺 தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் – 2 (நன்கு சுத்தம் செய்தது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 4 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது – 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 4 ஸ்பூன் (இறுதியில் சேர்க்க)
தேங்காய்ப்பால் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
👩🍳 செய்முறை:
1. ஆட்டுக்கால் தயார் செய்தல்
ஆட்டுக்காலை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2. வதக்குதல்
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும்
→ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
→ இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
→ தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.
3. மசாலா சேர்த்தல்
மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
4. வேக விடுதல்
இப்போது ஆட்டுக்காலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
குக்கரை மூடி 8–10 விசில் வரை வேக விடவும்.
5. தேங்காய்ப்பால் & பெப்பர் டச்
விசில் அடங்கிய பின் திறந்து கால் நன்றாக வெந்ததா பார்க்கவும்.
தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.
🍽️ பரிமாறும் முறை:
🔥 சூடான ஆட்டுக்கால் பெப்பர் பாயாவை
இடியாப்பம்
அப்பம்
தோசை
வெறும் பாயாவாகவும்
சாப்பிட்டால் சுவை அட்டகாசம் 😋