News Update

News Update News update

பழைய 'தோழர்களுக்கு' அல்வா... புதிய 'வரவுகளுக்கு' லட்டு! இபிஎஸ்-ஸின் பன்ச் பாலிடிக்ஸ்!தமிழக அரசியல் களம் இப்போது சீட் ஒது...
28/03/2026

பழைய 'தோழர்களுக்கு' அல்வா... புதிய 'வரவுகளுக்கு' லட்டு! இபிஎஸ்-ஸின் பன்ச் பாலிடிக்ஸ்!

தமிழக அரசியல் களம் இப்போது சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் செம கலகலப்பாக இருக்கிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நடக்கும் "பங்கு பிரிப்பு" பஞ்சாயத்துகளைப் பார்த்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு வழிப்போக்கரைப் போல நக்கலாக ஒரு கமெண்ட்டை தட்டிவிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் 10 ஆண்டுகாலமாக 'உப்பு தின்ற' பழைய தோழமைக் கட்சிகளுக்கு, இந்த முறை ஒரு சீட் குறைவாகக் கொடுத்து "டயட்" இருக்கச் சொல்லியிருக்கிறார்களாம். அதே சமயம், நேற்று வந்த 'புது வரவு' கட்சிக்கு தாராளமாகத் தொகுதிகளை அள்ளி வழங்கி, "வெல்கம் ட்ரிங்க்" கொடுத்திருப்பதாக எடப்பாடியார் சுட்டிக்காட்டியுள்ளார்‌. "பத்து வருஷமா கூடவே இருந்து 'செங்கொடி' தூக்கினவங்களுக்கு ஒரு சீட்டை குறைச்சு கையில் கொடுத்திருக்காங்க. பாவம், தோழர்கள் இப்போ 'அரிவாள் சுத்தியலை' விட அதிகமா யோசிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்காங்க!" என எடப்பாடியார் பேசியுள்ளார்.
"கூட்டணிக்கு புதுசா வந்தவங்களுக்கு மட்டும் ராஜ உபசாரம்... கூடவே இருந்தவங்களுக்கு 'கட்' போட்டது என்ன நியாயம்?"
"கூட்டணி தர்மம்னா என்னன்னு தெரியுமா? கூடவே இருந்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு, புதுசா வந்தவங்களுக்கு லட்டு கொடுக்கிறதுதான் இப்போதைய திராவிட மாடல் போல!" -

திமுக தரப்போ, "வெற்றி வாய்ப்புதான் முக்கியம்" என சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது. ஆனால், எடப்பாடியாரோ, "நாங்கெல்லாம் கரெக்டா பிரிச்சு கொடுப்போம்ல" என்கிற ரேஞ்சுக்கு பழைய தோழர்களை உசுப்பி விட்டு, திமுக கூட்டணியில் ஒரு சின்ன 'சரவெடியை' பற்றவைத்துள்ளார்.
மொத்தத்தில், "பத்து வருஷம் பழகினாலும் புது மோகம்தான் ஜெயிக்கும்" என்கிற சினிமா வசனத்தை அரசியல் களத்தில் எடப்பாடியார் இப்போது ரீ-மேக் செய்து கொண்டிருக்கிறார்!

கை"யை மீறிப்போகிறதா காரியம்? ஜோதிமணியின் "ஜோதி" ஆட்டம்!​காங்கிரஸ் கட்சி என்றாலே 'கோஷ்டி பூசல்' என்பது ரத்தத்தோடு ஊறிய வி...
28/03/2026

கை"யை மீறிப்போகிறதா காரியம்? ஜோதிமணியின் "ஜோதி" ஆட்டம்!

​காங்கிரஸ் கட்சி என்றாலே 'கோஷ்டி பூசல்' என்பது ரத்தத்தோடு ஊறிய விஷயம். ஆனால், இந்த முறை அது 'ரகசிய விற்பனை' என்ற லெவலுக்குப் போயிருப்பதாகக் கொதித்தெழுந்திருக்கிறார் ஜோதிமணி.
என்ன நடந்தது? - ஒரு குயிக் லுக்

​தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாகத் தில்லியில் ஆலோசனைகள் நடந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள கதர் சட்டையினரிடையே புகைச்சல் தாளவில்லை. "யார் யாருக்கு எந்தத் தொகுதி?" என்பதை விட, "யார் யாருக்கு என்ன டீல்?" என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்.

​தனது அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள ஜோதிமணி, நிர்வாகிகளை நோக்கிச் சில காரசாரமான கேள்விகளை வீசியுள்ளார்: "எல்லாமே ரொம்ப சீக்ரெட்டா நடக்குதுங்க. ஏதோ அணு ஆயுத ரகசியம் மாதிரி எதையும் சொல்ல மாட்டேங்குறாங்க. விரிவான விவாதமெல்லாம் இங்க வெறும் கனவுதான்!"

​"கட்சிக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதவங்க, வருஷக்கணக்கா உழைச்ச தொண்டனோட உழைப்பை வித்துத் திங்குறாங்க. இது வேட்பாளர் தேர்வா இல்ல 'சேல்ஸ்' மேளாவா?"
​லீடர் மட்டும் கட்சி இல்ல. "மாநிலத் தலைவரும், பொறுப்பாளர்களும் மட்டும் தான் கட்சியா? லட்சக்கணக்கான தொண்டர்கள் நாங்க என்ன தக்காளித் தொக்கா?"
​ "யாராலும் காப்பாற்ற முடியாது!"
​பட்டியல் வெளியான பிறகு விரிவாகப் பேசுவேன் என்று 'க்ளைமாக்ஸ்' சீனுக்கு இப்போதே லீடு கொடுத்திருக்கிறார் ஜோதிமணி.

இதே 'விற்பனை' அணுகுமுறை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் (கடவுளே வந்தாலும் கூட!) காப்பாற்ற முடியாது என ஒரு போடு போட்டுள்ளார். வழக்கமாக எதிர்க்கட்சிகள் தான் காங்கிரஸை விமர்சிக்கும். ஆனால் இப்போது "வேலிக்குள்ளேயே புகுந்து வேட்பாளரைத் தேடும்" வேலையைச் சொந்தக் கட்சியினரே விமர்சிப்பது, சத்தியமூர்த்தி பவனில் 'ஷாக்' அலைகளை உருவாக்கியுள்ளது.
​ஜோதிமணியின் இந்தப் போர்க்கொடிக்குத் தலைமை என்ன பதில் சொல்லப் போகிறது? அல்லது "இதுவும் ஒரு வகையான ஜனநாயகம் தான்" என்று மழுப்பப் போகிறதா? பட்டியல் வரும் வரை 'வெயிட்டிங் லிஸ்ட்' தான்!

கருணாஸ் விவகாரம்: “தொகுதி” தேடலில் “தொல்லை” கூடுதலா?முக்குலத்தோர் அமைப்புகளுக்கு திமுக தொகுதி பங்கீட்டில் இடம் அளித்திரு...
28/03/2026

கருணாஸ் விவகாரம்: “தொகுதி” தேடலில் “தொல்லை” கூடுதலா?

முக்குலத்தோர் அமைப்புகளுக்கு திமுக தொகுதி பங்கீட்டில் இடம் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சற்று ஆச்சரியத்தையும், சற்று “ஆஹா, இதும் நடக்குதா?” என்ற சிரிப்பையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக கருணாஸ் அவர்கள் வேதாரண்யம் தொகுதியை நேரடியாக குறிவைத்து கேட்டது, மேலிடத்தின் கணக்குப் புத்தகத்தோடு ஒத்துப் போகவில்லை போல. “வேதாரண்யம் வேண்டாம்… சிவகங்கை அல்லது சாத்தூர் எப்படி?” என்ற மாதிரி மென்மையான ‘ரீரூட்’ சிக்னல் மேலிடத்திலிருந்து வந்திருக்கிறது. ஆனால் அரசியல் என்பது Google Maps அல்ல — “alternate route available” என்றால் எல்லாரும் போக முடியாது.

சிவகங்கை தொகுதி கணக்கில் பார்க்கும்போது, அகமுடையார் வாக்கு பலம் ஒரு முக்கிய காரணி. அதனால் கருணாஸை அங்கே நிறுத்தலாம் என்ற யோசனை மேலிடத்தில் இருந்தாலும், “வாக்காளர்கள் என்ன சொல்றாங்க?” என்ற அடிப்படை கேள்வி கொஞ்சம் பின்புறம் தள்ளப்பட்டதுபோல தெரிகிறது. உள்ளூர் நிலவரப்படி, கருணாஸ் மீது மக்களிடம் உற்சாகம் குறைவாகவும், அதிருப்தி அதிகமாகவும் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
இங்கே தான் அரசியலின் சின்ன சதுரங்கம் ஆரம்பமாகிறது. மாவட்ட செயலாளர் இந்த அதிருப்தியை நேராக மேலிடத்திற்கு சொல்லாமல், “ஒரு முயற்சி பண்ணி பார்ப்போம்” என்ற பாதையை தேர்வு செய்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. சிலர் இதை இன்னும் ஒரு படி முன்னேற்றி, “வாக்கு பலம் நிரூபிக்கப்படாதபடி, பலத்தை சிதறடிக்கும் ஒரு அரசியல் சதியா?” என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.
இதற்கிடையில், உடன்பிறப்புகள் (கட்சியினர்) “நாம் வேலை செய்யணுமா, இல்லையா?” என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலிடம் ஒரு கணக்கு, மாவட்டம் ஒரு கணக்கு, மக்கள் இன்னொரு கணக்கு — மூன்றும் சேரும் போது தான் வெற்றி என்றால், இங்கே கணக்கு சரியாக வருமா என்பது தான் பெரிய கேள்வி.

"கில்லாடி" மேடமும்... கிள்ளுக்கீரையான சட்டமும்!​அரசாங்க சம்பளம் கை நிறைய வந்தாலும், அடுத்தவன் கைபேசியிலும், பெட்டிக்கடை ...
28/03/2026

"கில்லாடி" மேடமும்... கிள்ளுக்கீரையான சட்டமும்!
​அரசாங்க சம்பளம் கை நிறைய வந்தாலும், அடுத்தவன் கைபேசியிலும், பெட்டிக்கடை புகையிலையிலும் கை வைப்பவர்களுக்கு பஞ்சமே இல்லை போலிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த இரண்டு "லேடி சிங்கம்"களின் லீலைகள் தான் இப்போது டாப் ஆஃப் தி டவுன்.

​திருவண்ணாமலை: "டிஜிட்டல் திருட்டு" ஸ்டைல்!
​திருவண்ணாமலை மாவட்டம் மேங்களூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பெட்டிக்கடையில் புகையிலை விற்ற குற்றத்திற்காக மூன்று மாதம் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார். அவர் சிறையில் இருந்த சமயம், அவருடைய மொபைல் போன் காவல் நிலையத்தில் 'பாதுகாப்பாக' வைக்கப்பட்டிருந்தது.
​அங்கு சார்பு ஆய்வாளராக இருந்த கவிதா அவர்கள், "போன் சும்மா தானே இருக்கிறது" என்று நினைத்தாரோ என்னவோ, லாகவமாக அந்த போனை எடுத்து அதில் இருந்த ₹1.70 லட்சத்தை அபேஸ் செய்து தனது உறவினர் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
​பஞ்ச் டைலாக்: குற்றவாளியை திருத்த வேண்டிய போலீஸே, குற்றவாளியின் போனில் 'கூகுள் பே' விளையாடியதுதான் உச்சக்கட்டம்!
​தற்போது இந்த விவகாரம் எஸ்.பி. சுதாகர் கவனத்திற்குச் செல்ல, மேடம் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் "ரெஸ்ட்" எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சிவன் என சொல்லிவிட்டு சேட்டை மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் வைத்யா தன்னை சிவனின் அவதாரம் என கூறி ...
28/03/2026

சிவன் என சொல்லிவிட்டு சேட்டை

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் வைத்யா தன்னை சிவனின் அவதாரம் என கூறி பெண்ணிடம் அத்துமீறல்!

முகநூல் மூலம் அறிமுகமான பெண்ணிடம் கடவுளின் அவதாரம் என சொல்லி அத்துமீறிய ரிஷிகேஷ் வைத்யா. மேலும் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார்.

28/03/2026

பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு, கோவையின் முக்கியமான பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை.

நாளை மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார்.

கேரளம் தேர்தல் பரப்புரைக்காக தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை பாலக்காடு, திருச்சூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.

28/03/2026

விஜயை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி...

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category