Aadhiyagai Foods

Aadhiyagai Foods aadhiyagai farmer's store and value added products store from oddanchatram, dindigul DT, Tamilnadu.

மரபு விதை தாம்பூல பரிசு Native Seeds Return Gifts: திருமணங்களில் மணமக்களை வாழ்த்த வரும் உறவுகளின் வீடுகளில் செழித்து வளர...
18/08/2026

மரபு விதை தாம்பூல பரிசு Native Seeds Return Gifts: திருமணங்களில் மணமக்களை வாழ்த்த வரும் உறவுகளின் வீடுகளில் செழித்து வளரட்டும் மரபு விதைகள்.. உங்கள் வீட்டு சுபநிகழ்வுகளில் மரபு விதைகளை வழங்க விருப்பமா.. 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்..

Paramez Aadhiyagai
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

Aadhiyagai Foods மூலமாக நாங்கள் வழங்கும் பொருட்களின் பட்டியல் பகிர்கிறோம். வாட்ஸ்அப்பில் பொருட்கள் பார்வையிட https://wa....
05/08/2026

Aadhiyagai Foods மூலமாக நாங்கள் வழங்கும் பொருட்களின் பட்டியல் பகிர்கிறோம். வாட்ஸ்அப்பில் பொருட்கள் பார்வையிட https://wa.me/c/918526366796

1•பிரண்டை இட்லி தோசை பொடி
2•கறிவேப்பிலை இட்லி தோசை பொடி
3•முருங்கை இட்லி தோசை பொடி
4•வாழைப்பூ தொக்கு
5•ஆவாரம்பூ தொக்கு
6•மாஇஞ்சி ஊறுகாய்
7•எலுமிச்சை ஊறுகாய்
8•பூண்டு ஊறுகாய்
9•மாங்காய் ஊறுகாய்
10•நாரத்தங்காய் ஊறுகாய்
11•முளைகட்டிய சத்துமாவு
12•ராகி மால்ட்
13•பீட்ரூட் மால்ட்
14•ABC மால்ட்
15•செவ்வாழை மால்ட்
16•கேரட் மால்ட்
17•வெண்பூசணி மால்ட்
18•மூலிகை சீயக்காய் பொடி
19•மூலிகை குளியல் பொடி
20•நலங்குமாவு
21.உப்பில்லா சுண்டைக்காய் வத்தல்
22.கொத்தவரங்காய் வத்தல்
23.மணத்தக்காளி வத்தல்
24.மிதுக்கங்காய் வத்தல்
25.பாகற்காய் வத்தல்
26.முருங்கை இலை பொடி
27.Turmeric milk powder
28.கஸ்தூரி மஞ்சள் தூள்
29.மலைத்தேன்
30.கொம்புத்தேன்
31.அடுக்குத்தேன்
32.ரோஜா குல்கந்து
33.கடலை எண்ணெய்
34.நல்லெண்ணெய்
35.விளக்கெண்ணெய்
36.வேப்பெண்ணெய்
37.வேம்பாளம்பட்டை எண்ணெய்
38.சாம்பார் தூள்
39.குழம்பு மிளகாய் தூள்
40.மல்லித்தூள்
41.தனி மிளகாய் தூள்
42.கறிமசால் பொடி
43.காபி தூள்
44.பசு நெய்
45.சமையல் மஞ்சள்தூள்
46.இட்லி தோசை பொடி
47.பருப்பு பொடி
48.விருப்பாட்சி மலைவாழை
49.ராகி சாக்கோ மால்ட்
50.வரமிளகாய்

விலைபட்டியல் மற்றும் இதர தகவல் பெற 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம். கொரியர், தபால், பார்சல் மூலமாக இந்தியா முழுவதும் அனுப்ப இயலும்.

நன்றி.
Paramez Aadhiyagai
085263 66796

Learn more about their products and services

2026 ஆடிப்பட்ட விதைப்பிற்கான விதை தொகுப்புஒவ்வொரு வகை விதைகளும் 30₹. தபால் (அ) கொரியர் செலவு 50₹. விதைகள் பெற 085263 667...
04/08/2026

2026 ஆடிப்பட்ட விதைப்பிற்கான விதை தொகுப்பு

ஒவ்வொரு வகை விதைகளும் 30₹. தபால் (அ) கொரியர் செலவு 50₹.

விதைகள் பெற 085263 66796 என்ற எண்ணில் WhatsApp மூலம் தொடர்புகொள்ளலாம்.

WhatsApp-ல் தங்களின் பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் தங்களுக்கு விருப்பமான விதைகளின் பட்டியலை அனுப்பலாம். விதைகள் தபால் அல்லது கொரியர் மூலமாக அனுப்பப்படுகின்றன.

விதைகள் பற்றிய தகவல்களை www.aadhiyagai.co.in இணையதளத்திலும் காணலாம்.

🌱 விதைகளின் பட்டியல் 🌱

🍅 தக்காளி வகைகள்
• நாட்டு தக்காளி – செடி
• நாட்டு தக்காளி – கொடி
• மதனபள்ளி தக்காளி
• டோகோ தக்காளி
• பலவகை தக்காளி ரகங்கள்
• காட்டு தக்காளி

🍆 கத்தரி வகைகள்
• பச்சை கத்தரி
• ஒடவை பச்சை கத்தரி
• திண்டுக்கல் பச்சை கத்தரி
• கன்னிமானூத்து பச்சை கத்தரி
• மணப்பாறை கத்தரி
• கோவை வரி கத்தரி
• கோவில்பட்டி வெள்ளை உருட்டு கத்தரி
• கன்னியாகுமரி வெள்ளை நீள கத்தரி
• வெள்ளை முட்டை கத்தரி
• ஈரோடு கண்ணாடி கத்தரி
• கரூர் நீள கத்தரி
• ஊதா கத்தரி
• சிவப்பு வரி கத்தரி
• பொய்யூர் கத்தரி
• செவந்தம்பட்டி கத்தரி
• தொப்பி கத்தரி
• பவானி கத்தரி (நீள காய்)
• பவானி உருட்டு கத்தரி
• பலவகை கத்தரி ரகங்கள்

🌶️ மிளகாய் வகைகள்
• சம்பா மிளகாய்
• காந்தாரி மிளகாய்
• குண்டு மிளகாய்

🌿 வெண்டை வகைகள்
• பச்சை வெண்டை
• சிவப்பு வெண்டை
• பருமன் வெண்டை
• 2 வண்ண பருமன் வெண்டை
• மர வெண்டை
• யானைத்தந்த வெண்டை
• ஊசி வெண்டை
• மலை வெண்டை
• கஸ்தூரி வெண்டை
• பச்சை உருட்டு வெண்டை
• கொத்து வெண்டை
• பலவகை வெண்டை

🥬 இதர செடி & மலை காய்கறிகள்
• செடி காராமணி
• வரி காராமணி
• கேரளா காராமணி
• பலகிளை கொத்தவரை
• சிறிய கொத்தவரை
• செடி வகை பட்டை அவரை
• செடி வகை கோழி அவரை
• வெள்ளை முள்ளங்கி
• செடி பீன்ஸ்
• பட்டர் பீன்ஸ்

🎋 கொடி காய் வகைகள்
• பச்சை பாகல் நீளம்
• பச்சை பாகல் குட்டை
• மிதிபாகல்
• நீள புடலை
• குட்டை புடலை
• வரி புடலை
• பாம்பு புடலை
• மூக்குத்தி அவரை – பச்சை
• மூக்குத்தி அவரை – ஊதா
• சிறகு அவரை – பச்சை
• சிறகு அவரை – நீளம்
• நீள பீர்க்கன்
• குட்டை பீர்க்கன்
• உருட்டு பீர்க்கன்
• கொத்து பீர்க்கன்
• பழ வெள்ளரி
• உருட்டு வெள்ளரி
• முலாம் பழம்
• முள் வெள்ளரி
• வெள்ளை பூசணி
• பரங்கி / அரசாணி
• சிட்டு பூசணி
• ஆரஞ்சு பூசணி
• குடுவை சுரை
• நீள சுரை
• கும்ப சுரை
• மெழுகு பீர்க்கன்
• வெள்ளை தர்பூசணி
• நாட்டு தர்பூசணி

🌳 ஓராண்டு & பல்லாண்டு பயிர்கள்
• முருங்கை
• பப்பாளி
• நாட்டு ஆமணக்கு
• மர துவரை

🥗 கீரை வகைகள்
• அரைக்கீரை
• முளைக்கீரை
• சிறுகீரை பச்சை
• பச்சை தண்டங்கீரை
• சிவப்பு தண்டங்கீரை
• செங்கீரை
• பச்சை புளிச்சகீரை
• சிவப்பு புளிச்சகீரை
• மணத்தக்காளி கீரை
• கொத்தமல்லி
• சுக்காங்கீரை
• பருப்பு கீரை
• பாலக்கீரை
• அகத்திக்கீரை
• வெந்தயக்கீரை
• கொடி பசலை

🌼 மூலிகைகள் & பூக்கள்
• பூனைக்காலி கருப்பு
• பூனைக்காலி வெள்ளை
• சங்கு பூ வெள்ளை
• சங்கு பூ ஊதா
• தாமரை
• திருநீற்றுப்பச்சிலை
• செண்டுமல்லி
• காஸ்மோஸ் பூ
• துளசி
• கண்டங்கத்தரி
• சுண்டைக்காய்
• சதகுப்பை
• முசுமுசுக்கை
• முடக்கற்றான்

🌲 மர விதைகள்
• வில்வம்
• நாட்டுக்கருவேல்
• ஆணைகுண்டுமணி
• அலிஞ்சில்
• சீயக்காய்
• நாட்டு சீத்தாமரம்
• ஆத்திமரம்
• மந்தாரை
• இலைபுரசு
• சவுக்கு மரம்
• சரக்கொன்றை
• கருங்கொன்றை
• மஞ்சள்கொன்றை
• தோதகத்தி
• மயில்கொன்றை
• பெருநெல்லி
• குமுள்
• நீர்கடம்பு
• ஆச்சாமரம்
• சுபாபுல்
• பூமருது
• நீர்மருது
• கொடுக்காப்புளி
• நாட்டு வெள்ளை கொய்யா
• வேங்கை
• சந்தனம்
• தூங்குமூஞ்சி
• எட்டிமரம்
• மகோகனி
• தேக்கு
• தான்றிக்காய்
• வாதாங்கொட்டை
• பூவரசு
• இலந்தை

🌾 சிறுதானியங்கள் & பயிறு வகைகள்
• கேழ்வரகு
• வெண்சோளம்
• நாட்டு உளுந்து
• பாசிப்பயிறு
• வரிமொச்சை
• சுண்டல்
• தட்டைபயிறு
• நரிபயிறு
• கொள்ளு

7 வகை தக்காளி தொகுப்பு-200₹

20 வகை கத்தரி தொகுப்பு -500₹

12 வகை வெண்டை தொகுப்பு-300₹

50 வகை செடிகாய்கறி தொகுப்பு-1300₹

30 வகை கொடிகாய்கறி தொகுப்பு- 800₹

15 வகை கீரை தொகுப்பு-350₹

15 மூலிகை & பூக்கள் தொகுப்பு -350₹

7 வகை பல்லாண்டு பயிர்களின் தொகுப்பு -200₹

40 வகை மரவிதைகள் தொகுப்பு-1000₹

25 வகை மாடித்தோட்ட விதை தொகுப்பு -250₹

25 வகை வீட்டுத்தோட்ட விதை தொகுப்பு -250₹

25 வகை அடிப்படை காய்கறி விதை தொகுப்பு-500₹

50 வகை ஆடிப்பட்ட தொகுப்பு-1000₹

100 வகை காய்கறி கீரை மூலிகை தொகுப்பு-1800₹

150 வகை அனைத்து விதைகளின் தொகுப்பு-2400₹

1 ஏக்கருக்கு 25கிலோ பலதானிய விதைகள் -2875₹

நன்றி..
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்,
ஒட்டன்சத்திரம்.
+918526366796
+916380845836

கருப்பு கவுணி அரிசி கஞ்சி மிக்ஸ் 🌾கருப்பு கவுணி அரிசி, பாசிப்பருப்பு, மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றின் சத்தான கலவையில் த...
02/06/2026

கருப்பு கவுணி அரிசி கஞ்சி மிக்ஸ் 🌾

கருப்பு கவுணி அரிசி, பாசிப்பருப்பு, மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றின் சத்தான கலவையில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய கஞ்சி மிக்ஸ்.

✅ உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது
✅ செரிமானத்திற்கு உதவும் மிளகு மற்றும் சீரகம் சேர்க்கப்பட்டுள்ளது
✅ நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்க உதவும்
✅ காலை உணவு அல்லது மாலை நேர சத்தான பானமாக ஏற்றது
✅ குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தலாம்

தயாரிக்கும் முறை:
2–3 டேபிள் ஸ்பூன் கஞ்சி மிக்ஸை தண்ணீரில் கரைத்து 5–10 நிமிடங்கள் காய்ச்சி, தேவைக்கேற்ப உப்பு அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.

"சுவையுடன் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவு!" 🌿✨

Aadhiyagai Foods
📞 +91 85263 66796

புதிதாக வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் துவங்கும் நண்பர்களுக்காக ஒரு மாதகால இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி வாட்...
02/06/2026

புதிதாக வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் துவங்கும் நண்பர்களுக்காக ஒரு மாதகால இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி வாட்ஸ்அப் மூலமாக எளிய முறையில் 30 நாட்கள் நடைபெறும்.

பயிற்சி 2026 ஜூன்-1 முதல் துவங்கும்..

பயிற்சிக்கான பங்களிப்பு தொகை 1000₹.

பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமிருப்போர் +916380845836 +918526366796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தி மூலம் உறுதி செய்யவும்.

பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தோட்டம் துவங்க தேவையான அடிப்படையான 25 மரபு ரக காய்கறி ரகங்களின் விதைகள் வழங்கப்படும். இந்த 25 ரக விதைகளில் இருந்து மீண்டும் நாமே விதைகளை எடுத்து கொள்ள இயலும். அதற்காக விதை சேமிப்பிற்கான பயிற்சியும் வழங்கப்படும்.

100சதுர அடி இடம் ஒரு நபருக்கு தேவையான காய்கறி கீரை போன்ற அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்யும் .. அந்த இடம் மாடியாகவோ , நிலமாகவோ , எதற்கமே ஆகாது என நீங்கள் நினைக்கும் பாறை நிலமாகவோ , கட்டாந்தரையாகவோ இருக்கலாம் ..

நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு குடும்பத்திற்கான காய்கறி தேவையை ஒரு செண்ட் இடத்தில் பூர்த்தி செய்துகொள்ள இயலும்..என்ற கருவை கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது.

*பயிற்சி வாட்ஸ்அப் குழுவில் நடைபெறும். Live session/ live videoவாக பயிற்சி நடைபெறாது. தினசரி ஒரு தலைப்பின் கீழ் பயிற்சி கொடுப்போம். வாட்ஸ்அப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்தி தான் பயிற்சி எடுக்க உள்ளோம். அதாவது தகவல்களை ஆடியோவாக பேசியும் அதற்கான விளக்கங்களை எழுத்து வடிவிலும், அதற்கு தேவையான படங்களை பதிவிட்டும் தேவையானஇடங்களில் வீடியோக்களாக பதிவிட்டும் பயிற்சி நடைபெறும்.*

தினசரி மாலை 5 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் பயிற்சியை நடத்துகிறோம். *தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வாட்ஸ்அப்பில் கற்றுக்கொள்ளலாம்.*

நீங்கள் அந்த நேரத்தில் பயிற்சியை கவனிக்கலாம். அடுத்த நாள் பயிற்சி துவங்குவதற்கு முன்பு வரை முந்தைய நாள் பயிற்சி தகவல்களை பார்த்துக்கொள்வது அவசியம். தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நேரம் ஒதுக்கி பயிற்சியை காண்பது அவசியம்.

பயிற்சி:
1)ஏன் வேண்டும் வீட்டுத்தோட்டம்
2)வீட்டுத்தோட்டம் மூலம் என்னென்ன தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.
3)என்னென்ன செடிகள் உங்களுக்கு தேவை
4)எவ்வளவு இடம் உங்களுடைய விருப்பமான தோட்டத்திற்கு தேவை
5)400-500 சதுர அடி இடத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
6)பயிர்களின் சாகுபடி முறைகள்
7)உங்கள் வீட்டின் தோட்டத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
8)பயிர் சுழற்சி முறைகள்
9)உங்கள் வீட்டின் கொடி காய்கறிகளுக்கு எப்படியெல்லாம் பந்தல் அமைத்து தேவையை பூர்த்தி செய்வது
10)தினந்தோறும் கீரையை அறுவடை செய்யும் சுழற்சி முறைகள்.
11)மூலிகைகளை, பூக்களை பற்றிய கலந்துரையாடல்
12)மரபு ரக விதைகள் பற்றிய விழிப்புணர்வு
13)விதைகளை எங்கெல்லாம் சேகரிப்பது
14)விதைகளை முறையாக வீட்டில் பராமரிப்பது, பாதுகாப்பது.
15)பூச்சிப்பராமரிப்பு
16)பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வு
17)பயிர்களை தாக்கும் நோய்களும் அதலிருந்து செடிகளை பாதுகாக்கும் முறைகளும்
18)வீட்டு கழிவுகளை தினந்தோறும் தோட்ட தேவைக்கு பயன்படுத்தும் முறைகள்..
_________________________
Regards,
Paramez Aadhiyagai
+916380845836
+918526366796

Paramez Aadhiyagai

Honey Dipped Dried Fig powder:மலைதேனில் ஊறிய நாட்டு அத்திபழப்பொடி விற்பனைக்கு வழங்குகிறோம். நாட்டு அத்திபழங்களை சேகரித்த...
07/05/2026

Honey Dipped Dried Fig powder:

மலைதேனில் ஊறிய நாட்டு அத்திபழப்பொடி விற்பனைக்கு வழங்குகிறோம். நாட்டு அத்திபழங்களை சேகரித்து; சுத்தம் செய்து; நிழலில் உலர்த்தி; இடித்து தூளாக்கி; சுத்தமான மலைதேன் நான்கு மடங்கும் அத்திபழத்தூள் ஒரு மடங்கும் என கலந்து ஒரு வாரகாலம் ஊறவைத்து தற்போது வழங்குவதற்கு தயாராகி உள்ளோம்.. 450கிராம் மற்றும் 950கிராம் பாட்டில்களில் வழங்குகிறோம். தேவைப்படும் நண்பர்கள் 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்து பெறலாம்.

Paramez Aadhiyagai
Aadhiyagai Foods

குழம்பு மிளகாய் தூள் (Kulambu Milagai Thool):For order visit our whatsapp catalogue: https://wa.me/p/8344300132336273/91...
02/05/2026

குழம்பு மிளகாய் தூள் (Kulambu Milagai Thool):

For order visit our whatsapp catalogue: https://wa.me/p/8344300132336273/918526366796

குழம்பு மிளகாய் தூள் என்பது தென்னிந்திய சமையலில், குறிப்பாக தமிழ்நாட்டில் குழம்பு வகைகள், வறுவல் மற்றும் பொரியல் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா கலவையாகும்.

பாரம்பரிய முறையில் சிறந்த மணத்துடனும் சுவையுடனும் வீட்டிலேயே அரைப்பதற்கான அளவுகள் இதோ

தேவையான பொருட்கள்:
நீட்டு மிளகாய்:1 கிலோ
தனியா (மல்லி):1 கிலோ
மஞ்சள்:100 கிராம் (விரலி மஞ்சள்)
மிளகு:100 கிராம்
சீரகம்:100 கிராம்
சோம்பு:50 கிராம்
வெந்தயம்:50 கிராம்
துவரம் பருப்பு:100 கிராம்
கடலை பருப்பு:100 கிராம்
உளுந்தம் பருப்பு:50 கிராம்
கடுகு:25 கிராம்
கறிவேப்பிலை:ஒரு கைப்பிடி (நிழலில் உலர்த்தியது)

செய்முறை:
1.சுத்தம் செய்தல்:மிளகாய் மற்றும் மல்லியில் உள்ள காம்புகள் மற்றும் தூசுகளை நீக்கி சுத்தம் செய்யவும்.

2.உலர்த்துதல்:அனைத்துப் பொருட்களையும் நல்ல வெயிலில் 1 அல்லது 2 நாட்கள் மொறுமொறுவென்று ஆகும் வரை காய வைக்கவும். மிளகாயை உடைத்தால் உடைய வேண்டும்.

3.வறுத்தல் (விருப்பமென்றால்):மிளகாய் மற்றும் மல்லியைத் தவிர மற்ற மசாலாப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகளை மட்டும் வாணலியில் இட்டு லேசாக மணம் வரும் வரை வறுத்துச் சேர்த்தால் பொடி நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

4.அரைத்தல்:காய வைத்த பொருட்களை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

5.ஆறவைத்தல்:அரைத்து வந்த மாவை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும். சூடாக இருக்கும்போதே டப்பாவில் அடைத்தால் பொடி கட்டி விழுந்துவிடும்.

குறிப்புகள்:
நிறம்:நல்ல சிவப்பு நிறம் வேண்டுமென்றால், 1 கிலோ மிளகாயுடன் 200 கிராம் காஷ்மீரி மிளகாய் சேர்த்து அரைக்கலாம்.

பயன்பாடு:இந்தப் பொடியை மீன் குழம்பு, காரக்குழம்பு, சாம்பார் மற்றும் அனைத்து வகையான காய்கறி வறுவல்களுக்கும் பயன்படுத்தலாம்.

சேமிப்பு:ஈரப்பதம் இல்லாத சில்வர் அல்லது கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்தால் ஒரு வருடம் வரை மணம் மாறாமல் இருக்கும்.

Aadhiyagai Foods
085263 66796

₹240.00

வேம்பாளம்பட்டை எண்ணெய்.. இது மயிர்க்கால்களை வலுவாக்கி முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது. இளநரை வராமல் தடுக்கவும் இது பயன்...
16/03/2026

வேம்பாளம்பட்டை எண்ணெய்..

இது மயிர்க்கால்களை வலுவாக்கி முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது. இளநரை வராமல் தடுக்கவும் இது பயன்படுகிறது. தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த எண்ணெயைத் தலையின் வேர்க்கால்களில் படும்படி நன்றாகத் தேய்க்கவும். குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை ஊறவிடவும். பிறகு சீயக்காய் கொண்டு தலையை அலசவும். இது முடியை மென்மையாக்கவும், இளநரையைத் தடுக்கவும் உதவும்.சிறிது வேம்பாளம்பட்டை எண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்த்து, 20 நிமிடம் கழித்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை குறையும்.

வேம்பாளம்பட்டை எண்ணெய் தேவைப்படும் நண்பர்கள் 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம்.

Aadhiyagai Foods

"தேனும் - ஈரமும்"  Humidity & Honeyநமது முன்னோர்கள் காலம் காலமாகக் கையாண்டு வந்த தேன் சேகரிப்பு முறை என்பது ஒரு கலை. தேன...
07/03/2026

"தேனும் - ஈரமும்"
Humidity & Honey

நமது முன்னோர்கள் காலம் காலமாகக் கையாண்டு வந்த தேன் சேகரிப்பு முறை என்பது ஒரு கலை. தேனில் இருக்கும் ஈரப்பதம் அதன் தரத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாகும். இயற்கையாகவே தேனில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் இருக்கும், ஆனால் அது சரியான அளவில் இருந்தால் மட்டுமே தேன் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.
முன்னோர்கள் கையாண்ட முறைகள்
பண்டைய காலந்தொட்டு தேன் எடுக்கும் தொழிலில் நம் சமூகம் சில இயற்கையான நுணுக்கங்களைப் பின்பற்றி வந்தது.

பருவகாலத் தேர்வு: தேன் எடுப்பதற்கு கோடை காலத்தையே நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர். காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது சேகரிக்கப்படும் தேன் அடர்த்தியாகவும், குறைந்த நீர்ச்சத்தோடும் இருக்கும்.

முதிர்ந்த தேன் அடைகள்: தேனீக்கள் தேனைச் சேமித்து, அதன் ஈரப்பதம் குறைந்தவுடன் மெழுகினால் அந்த அறைகளை மூடிவிடும் (Capped Honey). இத்தகைய 'மூடப்பட்ட' அடைகளில் இருந்து மட்டுமே தேன் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதுவே இயற்கையான ஈரப்பதம் குறைப்பு முறையாகும்.

மண்பாண்டச் சேமிப்பு: சேகரித்த தேனை மெல்லிய துணியால் வடிகட்டி, மண்பாண்டங்களில் ஊற்றி வெயிலில் வைப்பார்கள். மண்பாண்டத்தின் நுண்துளைகள் மற்றும் சூரிய வெப்பம் தேனில் உள்ள தேவையற்ற ஈரத்தை வெளியேற்ற உதவின.

தேனைச் சிதையாமல் பாதுகாக்கப் பின்பற்றப்பட்ட முக்கிய முறைகள் பற்றி பார்ப்போம்..

சூரிய ஒளிச் சிகிச்சை: தேனை நேரடியாகக் கொதிக்க வைக்காமல், கண்ணாடி பாட்டில்களில் அடைத்து மிதமான காலை வெயிலில் வைப்பதன் மூலம் அதில் உள்ள நுண்-ஈரப்பதம் ஆவியாகும்.

ஈரமில்லாப் பாத்திரங்கள்: தேன் சேமிக்கும் பாத்திரங்கள் முற்றிலும் உலர்ந்த நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். ஒரு சொட்டு நீர் பட்டாலும் தேன் புளிக்கத் தொடங்கிவிடும்.

தற்காலத்தில் நாம் எவ்வாறு ஈரத்தை வெளியேற்றிச் சேமிக்கலாம்?
இயற்கையாகக் கிடைக்கும் தேனில் 18% முதல் 20% வரை ஈரப்பதம் இருக்கலாம். அதைவிட அதிகமாக இருந்தால் தேன் விரைவில் புளித்துவிடும் (Fermentation). இதைச் சரிசெய்ய கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றலாம்..

நிழலில் உலர்த்துதல்: தேனை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி, அதன் மேல் மெல்லிய மஸ்லின் துணியைக் கட்டி, காற்றோட்டமான மற்றும் உலர்ந்த அறையில் வைக்கலாம். இது காற்றில் உள்ள வெப்பத்தைப் பயன்படுத்தி ஈரத்தை ஈர்க்கும்.

மறைமுக வெப்பம் (Double Boiler Method): தேனை நேரடியாக அடுப்பில் வைக்கக் கூடாது. ஒரு பாத்திரத்தில் சுடுநீரை வைத்து, அதற்குள் தேன் உள்ள பாத்திரத்தை வைத்து வெப்பப்படுத்தலாம். இது தேனில் உள்ள சத்துக்கள் அழியாமல் ஈரத்தை வெளியேற்ற உதவும்.

கண்ணாடிப் பாத்திரங்கள்: பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்த்து, காற்றுப்புகாத கண்ணாடிப் பாட்டில்களில் தேனைச் சேமிப்பதே சிறந்தது.

இயற்கையில் கிடைக்கும் மலை தேன், கொம்பு தேன், அடுக்கு தேன் போன்ற தேன் தேவைப்படும் நண்பர்கள் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம். தபால் மூலம் அனுப்ப இயலும்.

தேன் என்பது வெறும் இனிப்பு மட்டுமல்ல, அது ஒரு மாமருந்து. அதில் உள்ள "ஈரம்" மேலாண்மையைச் சரியாகக் கையாண்டால், தேன் பல ஆண்டுகளுக்குத் தன் மருத்துவ குணத்தை இழக்காமல் இருக்கும்.

இயற்கையோடு இணைந்து நமது முன்னோர்கள் பின்பற்றிய இந்த நுணுக்கங்களை நாமும் கடைப்பிடித்துத் தூய்மையான தேனைப் பாதுகாப்போம்.

Paramez Aadhiyagai
Aadhiyagai Foods
085263 66796
Oddanchatram

#தேன்

Address

Oddanchatram
Dindigul
624619

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919962661258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aadhiyagai Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aadhiyagai Foods:

Shortcuts

Share

Category