Poompozhil Cholai Natural Farm

Poompozhil Cholai Natural Farm இயற்கையுடன் ஒரு பயணம்.

28/03/2026

பண்ணை வடிவமைத்தலும் உற்பத்தியும் விற்பனையும்- ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில்.
#இயற்கைஉழவர்நுகர்வோர்கூட்டமைப்பு #மரபுஅறிவு

26/03/2026

ஏன் வேண்டாம் ஏற்றுமதி? நமக்கு வேண்டாமா நல்ல பொருட்கள்?- ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில்.
#இயற்கைஉழவர்நுகர்வோர்கூட்டமைப்பு #மரபுஅறிவு

25/03/2026

தொழில் நுட்பங்கள், மரபு அறிவு, சின்ன செயல் திட்டங்கள்- ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில். முழு வீடியோவின் லின்க் கீழே கருத்துரையில்.
#இயற்கைஉழவர்நுகர்வோர்கூட்டமைப்பு #மரபுஅறிவு

24/03/2026

திண்டுக்கல் நகர வாரச்சந்தையைக்குறித்து- ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில். முழு வீடியோவின் லின்க் கீழே கருத்துரையில்.
#இயற்கைஉழவர்நுகர்வோர்கூட்டமைப்பு

23/03/2026

தூயமல்லி, காலாபாத், கருப்புக்கவுனி, இலுப்பைப்பூ சம்பா ஆகிய நெல் ரகங்கள் அனைத்தையும் அறுவடை செய்து, காயவைத்து, மூட்டைகளாக சேமித்து வைத்துவிட்டோம்.

நாட்டு கருப்புக்கவுனி – ஒரு ஏக்கரில் 17 (75 கிலோ) மூட்டைகள்
இலுப்பைப்பூ சம்பா – 11 மூட்டைகள்
காலாபாத் – 1.35 ஏக்கரில் சுமார் 21 மூட்டைகள்
மாப்பிள்ளை சம்பா – இன்ஷா அல்லாஹ்,
நாளை அறுவடை.

இந்த முறை பயிர்களில் கவனித்த சில வித்தியாசங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி எல்லா ரகங்களையும் விதைத்தோம். ஆனால் மழையின் நிலைமாறுபாட்டால் நடவு செய்ய 30 நாட்களுக்கும் மேலாக தாமதமானது. எங்களூரில் புழுதி நாற்றாங்கால் முறை என்பதால், நாட்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், நடவு செய்யும் போது 5–6 நாற்றுகளை சேர்த்து நட வேண்டும் . சிம்பு வெடிக்காது.

காலாபாத் மற்றும் இலுப்பைப்பூ சம்பா நேரத்திற்கு அறுவடைக்கு வந்துவிட்டன. ஆனால் மற்ற மூன்று ரகங்கள் சுமார் 3 வாரங்கள் தாமதமாகின. தண்ணீர் பற்றாக்குறையால் காய்ச்சலும் பாய்ச்சலும் தான்.

பகலில் கடும் வெயில், இரவில் கடும் குளிர் – சில நாட்களில் இரவு வெப்பநிலை 12–13°C வரை குறைந்தது. இதனால் கதிர் வெளிவருவதும் தாமதமானது.

தூயமல்லி மட்டும் இந்த முறை 9 ஏக்கரில் நட்டிருந்தோம். கடந்த முறை 8 ஏக்கரில் கிடைத்த விளைச்சலே, இந்த முறை 9 ஏக்கரிலும் கிடைத்துள்ளது. நெல் மிகவும் சன்னமாக இருக்கிறது.

இந்த ஆண்டில் மழை நாட்கள் மிகக் குறைவு. ஆனால் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் சராசரி மழை பெய்துவிட்டதாகவும், தேங்காய் விளைச்சல் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றன.

நிலத்தில் இருப்பவர்களுக்கு உண்மை வேறு தான் தெரிகிறது. திண்டுக்கல் பகுதியில் நெல் நடவு மிகவும் குறைவு. மஞ்சளாறு வடிகால் பகுதிகளில் குளங்களே நிரம்பவில்லை. நெல் பயிரிடப்படாததால், வைக்கோலுக்கு நல்ல தேவை உருவாகி, தற்போது நல்ல விலை கிடைக்கிறது.

நிலத்தில் நடப்பதை நிலத்திலிருந்து பேசுவோம் 🌾

இறைவனுக்கு நன்றி!!

15/03/2026

திண்டுக்கல் மாவட்ட இயற்கை உழவர்களின் வாரச்சந்தை. அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

#இயற்கைஉழவர்நுகர்வோர்கூட்டமைப்பு

06/03/2026
பூம்பொழிலைப்பற்றிய புரிதலுக்கு....
24/02/2026

பூம்பொழிலைப்பற்றிய புரிதலுக்கு....

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் காதர் மீரான். முதுகலை இயற்பயில் படித்த இவர், சில ஆண....

கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.சொந்தமாகச் செக்கு வைத்து எண்ணெய் விற்பனை தொடங்கி இன்ற...
19/02/2026

கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

சொந்தமாகச் செக்கு வைத்து எண்ணெய் விற்பனை தொடங்கி இன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதற்கு முன்பு இரண்டு–மூன்று ஆண்டுகள் தேங்காய் எண்ணெய், பின்னர் எள் கிடைக்கும் காலங்களில் நல்லெண்ணெய், அதன் பின் கடலை எண்ணெய் ஆகியவற்றை வெளியில் ஆட்டி வாங்கி வழங்கிக் கொண்டிருந்தோம்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், எங்களின் உறுதியும் சேர்ந்து, சொந்தச் செக்கு அமைக்கும் தைரியம் கொடுத்தது. இன்று எண்ணெய் விற்பனை, தோட்டத்திற்கான சில இடுபொருட்களை வெளியில் வாங்க வேண்டிய தேவையை குறைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

எங்களிடம் கிடைக்கும் புண்ணாக்குகள் அனைத்தும் வேளாண்மைக்கே திருப்பி செல்கின்றன. வேப்பம் புண்ணாக்கைத் தவிர மற்ற அனைத்தும் நம்மிடமிருந்தே. “ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு” என்ற இயற்கைச் சுற்றுச்சூழல் நெறியைப் பின்பற்றி, ஊட்டச்சத்துகள் நிறைந்த புண்ணாக்குகளை மண்ணிற்கே செலவிடுகிறோம்.

எல்லாவற்றிலும் தரத்திற்கே முன்னுரிமை.
பயன் நமக்கு மட்டுமல்ல — இந்த பேருலகின் எல்லா உயிர்களுக்கும்.

நலம் பெறுவீர்!
நலம் தருவீர்! 🌱

Address

Narasinghapuram, Sithayankottai
Dindigul
624708

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

0091-9994980250

Alerts

Be the first to know and let us send you an email when Poompozhil Cholai Natural Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poompozhil Cholai Natural Farm:

Share

Category