Iyarkai Karangal

Iyarkai Karangal Palm Jaggery chocolate manufacturing & sales 9487624149 கருப்பட்டி (பனைவெல்லம்) தயாரிப்பு மற்றும் நேரடி விற்பனை

22/06/2026

"மாதுளை பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இது உடலின் செல்களை பாதுகாக்க உதவுகிறது."
"இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் மாதுளை மிகவும் உதவுகிறது."
"இதில் வைட்டமின் C நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது."
"தினமும் மாதுளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது."
"சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த மாதுளை பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள மறக்காதீர்கள்."

21/06/2026

YouTube Shorts / Reel-க்கு சின்னதாகவும் கவர்ச்சியாகவும்:
🌿 முருங்கை – இயற்கையின் சூப்பர் உணவு! 💪 முருங்கை சாப்பிட்டால் என்ன நடக்கும்? 🌳 முருங்கையின் 7 அற்புத நன்மைகள் 🥬 தினமும் முருங்கை சாப்பிடுங்கள்! ❤️ முருங்கை: உடலுக்கு ஒரு வரப்பிரசாதம் ⚡ முருங்கை தரும் சக்தி தெரியுமா? 👀 முருங்கையின் மறைக்கப்பட்ட நன்மைகள் 🌱 ஒரே மரம்... ஆயிரம் நன்மைகள் – முருங்கை 🏆 முருங்கை ஏன் சூப்பர் ஃபுட்? 🔥 முருங்கை சாப்பிடும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்!
அதிக வியூஸ் வரக்கூடிய தலைப்பு:
👉 "முருங்கை சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? 🤔🌿"
👉 "ஒரே முருங்கை மரம்... ஆயிரம் நன்மைகள்! 🌳💪"
👉 "முருங்கையின் அற்புத சக்தி | தெரியாத உண்மைகள் 😲"

20/06/2026

"செயற்கை கலப்படமின்றி, பனை மரத்தின் இயற்கை சுவையும் சத்துக்களும் நிறைந்த ஆரோக்கிய பானம்."

19/06/2026

"பனங்கருப்பட்டியில் உள்ள இயற்கை ஊட்டச்சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்க உதவுகின்றன. தினசரி அளவோடு பயன்படுத்தினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைத்து, பாரம்பரிய ஆரோக்கியமான இனிப்பாக பயன்படுகிறது."

18/06/2026

"புங்கை மரம் சுற்றுச்சூழலை குளிர்வித்து, நிலத்தடி நீரை பாதுகாத்து, பசுமையை அதிகரிக்க உதவுகிறது. அதிக மரங்கள் வளரும்போது ஈரப்பதம் அதிகரித்து, மழை சுழற்சிக்கும் ஆதரவாக அமைகின்றன."

17/06/2026

"பனங்கள்ளு... பனைமரத்தின் இயற்கை வரம்!
இயற்கை தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பானம்.
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
கோடை வெப்பத்தை தணிக்க உதவுகிறது.
நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய இயற்கை பானம்.
பனையை காப்போம்... இயற்கையை நேசிப்போம்!"

16/06/2026
16/06/2026

பனையின் மூலம் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம்

பனை மரத்தின் பயன்பாட்டை அடுத்தகட்டத்திற்க்கு கொண்டுசெல்லாம்

பனை மரங்களைப்பற்றியும், பனை மரத்தின் நன்மைகளைப் பற்றியும் தெரியாதவர்கள் தமிழ் நாட்டில் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விட்டது .
இருந்தபோதும் பனைமரங்கள் வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை.

பனை மரங்களில் கிடைக்கும் நன்மைகள் அத்தனையும் தெரிந்தும் வெட்டப்படுவதற்க்கான காரணம் சிறு குறு விவசாயிகளின் பொருளாதார நன்மைகள் குறைவு என்பதுதான்.

பொருளாதாரத்தை மேம்படுத்த மரம் ஏறுவதற்கும், பதநீர் இறக்கி அதை காய்ச்சுவதற்க்கும் புதிய டெக்னாலஜி கொண்டுவரவேண்டும்.

தற்போது ஒரு மனிதனால் அதிகபட்சமாக 20மரங்களே ஏறி இறங்க முடிகிறது காலை20+ மாலை20 இதுவே 40 மரமாகிவிடுகிறது

ஆண்கள் மரம் ஏறி பதநீர் இறக்கி கொடுத்தால் பெண்கள் அதை காய்ச்சி கருப்பட்டியாக்கி கொடுக்கிறார்கள்.
சராசரியாக ஒரு நாளைக்கு 10 கிலோ என்று வைத்துக் கொண்டால் ஒரு குடும்பத்திற்க்கு போதுமானதாக இல்லை
அதை விற்பனை செய்யுபோது ஏழை மக்கள் எளிதாக வாங்கக்கூடியதாக இல்லை
இந்த இடைவெளியை போக்க
பத்திற்கும் மேற்பட்ட பனை தொழிலாளிகள் ஒன்றினைந்து குழுவாக ஒரே இடத்தில் கருப்பட்டி காய்ச்சி விற்பனை செய்யும்போது உற்பத்தியை பெருக்க முடியும்
உற்பத்தியை பெருக்கினால் விலையும் தானாக குறைந்துவிடும்.

அல்லது விவசாயிகளிடமிருந்து ஆவின் போன்ற நிறுவனங்கள் எப்படி பால் கொள்முதல் செய்கிறார்களோ அதேப் போன்று பனை தொழிலாளிகளிடமிருந்து பதநீரை கொள்முதல் செய்து ஒரே இடத்தில் வைத்து கருப்பட்டியை காய்ச்சினால் உற்பத்தியை பெருக்க முடியும்.

இதைத்தான் நான் சில வருடங்களாக முயற்சி செய்து வருகிறேன்.
பாலின் தரத்தை பரிசோதனை செய்ய இயந்திரம் (அனலைசர்) இருப்பது போல் பதநீரின் தரத்தை பரிசோதனை இயந்திரம் (அனலைசர்) இருந்தால் உடனே எங்கள் பகுதியில் உற்பத்தியை துவங்கி விடுவேன்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால் 400 ரூபாயில் இருக்கும் கருப்பட்டி வெறும் 100 ரூபாய்க்கு கொடுக்க முடியும்.

எனக்கு தெரிந்து இனியும் பனைமரத்தின் நன்மைகளைப் பற்றி பிரச்சாரம் செய்வது பொருத்தமற்றது என்று நினைக்கிறேன்
அரசு பனை மரத்தை வெட்ட தடை விதிருந்தாலும் வெட்டுவதை தடுக்க முடியவில்லை
விவசாயிகளுக்கு பொருளாதார நன்மைகள் இல்லாத போது அவர்களை தடுக்க முடியாது.

பொருளாதாரத்தை பொருக்க தகுந்த இயந்திரங்கள் தேவை
எளிமையான இயந்திரத்தை கண்டுபிடித்தால்
விவசாயிகளும் பொதுமக்களும் யாரும் சொல்லாமலே அவர்ளே முன்வந்து மரங்களை வளர்ப்பார்கள்.

பதிவு அர்த்தமுள்ளதாக, பயனுள்ளதாக இருந்தால் அனைத்து மக்களிடமும் சென்று சேரவேண்டும் என்றால் உடனே Share செய்யுங்கள் (பகிருங்கள்) நன்றி
பனை ஆய்வாளர்கள்
இயற்கை கரங்கள்
இரா.மணிவண்ணன்

https://wa.me/c/919487624149

Whatsapp: Product Catlog List: https://wa.me/c/919487624149

Website: iyarkaikarangal.com

Email: [email protected]

page: https://www.facebook.com/Manivannan9945679783?mibextid=ZbWKwL

Facebook: https://www.facebook.com/profile.php?id=100004215259181&mibextid=ZbWKwL

Milk Analyser போன்ற இயந்திரம் இருந்தால்
பதநீரை பெற்றுக்கொண்டு ரசீதையும் உரிய பணத்தையும் விவசாயிக்கு கொடுத்து விடலாம்

விவசாயிகளுக்கு காய்ச்சும் வேலை குறையும்
வேலைப்பளு குறைந்தால் பதநீர் உற்பத்தி அதிகரிக்கும்
உற்பத்தி அதிகரித்தால் கருப்பட்டியின் விலை குறையும்
விலை குறைந்தால் அனைத்து மக்களும் வாங்கி உபயோகப்படுத்துவார்கள்

பதநீரை பரிசோதிக்காமல் வாங்கி காய்ச முடியாது
பதநீரில் 1)சுண்ணாம்பு கூடுதலாக இருக்கும் அல்லது குறைவாக கிடைக்கும்.
சுண்ணாம்பு கூடுதலாக இருக்கும் பதநீரை காய்சினாலும் பதம் வராது சுண்ணாம்பு குறைவாக இருந்தாலும் பதம் வராது.
2) சில பனை மரங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்
சில மரங்களில் நீர் தன்மை அதிகரித்து சர்க்கரை தன்மை குறைவாக இருக்கும்.
இதில் இரண்டு விதமான பதநீருக்கும் ஒரே விலையை கொடுக்க முடியாது.
அப்படி ஒரே விலையை கொடுத்தால் பதநீருடன் தண்ணீரை கலந்து கொடுத்துவிடுவார்கள்.
ஏற்கனவே சாலை ஓரங்களில் பதநீரை விற்பனை செய்கிறோம் என்ற பெயரில் 10 லிட்டர் பதநீருடன் 20லிட்டர் தண்ணீர்+ வெல்லை சர்க்கரை+ சாக்ரீன் போன்றவற்றை கலந்து காலை முதல் மாலை 7 மணி வரை விற்பனை செய்கிறார்கள்.
விற்பனையோ அமோகம்.
3) ஆண் பனை மரத்தின் பதநீருக்கும் பெண் பனை மரத்தின் பதநீருக்கும் சிறிது வேறுபாடு இருக்கும்.

இது போன்ற அத்தனை குறைபாடுகளையும் கண்டறிந்து தரமான பதநீரை சேகரித்து காய்ச்சி கருப்பட்டியாக்கி
வெற்றிகரமாக மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்றால்
நவீன இயந்திரம் இருந்தால் தான் முடியும்
வாய்ப்பு உள்ளவர்கள் முயற்சி செய்யுங்கள் பனைத்தொழிலை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

15/06/2026

பனை வெல்லம் (கருப்பட்டி) ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. நீங்கள் குறிப்பிட்டது போல, இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இது முடி ஆரோக்கியத்திற்கும், ரத்த சோகை (Anemia) தடுப்பிற்கும் பெரிதும் உதவுகிறது.
இதன் செயல்முறை மற்றும் பயன்களைப் புரிந்துகொள்ள கீழே உள்ள விளக்கங்கள் உதவும்:
ஹெமோகுளோபின் மற்றும் இரும்புச் சத்து: உடலில் இரும்புச் சத்து போதுமான அளவு இருக்கும்போதுதான், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ஆக்சிஜனை உடலின் அனைத்து பாகங்களுக்கும், குறிப்பாக முடி வேர்களுக்குச் சரியாகக் கொண்டு செல்லும். இரும்புச் சத்து குறைவாக இருந்தால் (அனீமியா), முடி வேர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் முடி பலவீனமடைந்து கொட்டத் தொடங்கும். கருப்பட்டி இதைச் சரிசெய்ய உதவுகிறது.
பொட்டாசியத்தின் பங்கு: பொட்டாசியம் உடலின் நீர்ச்சத்தை சமநிலையில் வைக்கவும், நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் துணைபுரிகிறது.
இந்தக் காரணங்களால்தான், பனை வெல்லம் ரத்த சோகையைத் தடுக்கவும், முடி உதிர்வைக் குறைக்கவும் ஒரு சிறந்த இயற்கை உணவாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது, உடலின் ஒட்டுமொத்த இரும்புச் சத்து அளவை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Address

Bargur
Krishnagiri
635104

Alerts

Be the first to know and let us send you an email when Iyarkai Karangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iyarkai Karangal:

Share