Pandiyan Juice Corner

Pandiyan Juice Corner ●PANDIAN JUICE CORNER●

We Serve Up Fresh Juices And Sell Fresh Fruits ●PANDIAN JUICE CORNER●

We Serve Up Fresh Juices And Sell Fresh Fruits..

We do have 4 branches in Madurai
Our serving of Juice and fruits selection were created entirely from fresh fruits since 1983.. Available in affordable price...
Seasonal fruits are also available here...
"If life gives you a lemon,we make lemonade for you😎"

Our Shop in Madurai Lets Vibe Channel.
03/04/2025

Our Shop in Madurai Lets Vibe Channel.

Our New Branch Opened Yesterday.அனைவரையும் வரவேற்கிறோம்
27/02/2023

Our New Branch Opened Yesterday.
அனைவரையும் வரவேற்கிறோம்

ரோஸ் மில்க்We serve up the Rose Milk @ Rs.25Come and Taste it.🍹ரோஸ் மில்க் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானமா...
12/01/2019

ரோஸ் மில்க்

We serve up the Rose Milk @ Rs.25
Come and Taste it.🍹

ரோஸ் மில்க் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானமாகும்.

Go Green, Use Jute
01/01/2019

Go Green, Use Jute

வெண்ணெய் பழ ஜூஸ்We serve up the Avocado/Butter Fruit/Makhanphal Juice @ Rs.50Come and Taste it.🍹Also we sale Avocado/But...
08/09/2018

வெண்ணெய் பழ ஜூஸ்

We serve up the Avocado/Butter Fruit/Makhanphal Juice @ Rs.50
Come and Taste it.🍹
Also we sale Avocado/Butter Fruit/Makhanphal Fruit

இதயத்திற்கு ஏற்றது

இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க மிகவும் உதவியாக இருக்கும் பி 6 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை வெண்ணெய் பழத்தில் அதிகளவில் உள்ளன. எனவே, இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக வெண்ணெய் பழம் உள்ளது. மிகவும் உயர்வான தனித்த நிலையில் செறிவூட்டப்பட்ட பழமாக இருப்பதால், இது மாரடைப்பைத் தடுக்கும் பழமாகவும் உள்ளது.

தோலுக்கு ஏற்றது

வெண்ணெய் பழ எண்ணெய் தோலின் அமைப்பையும், தரத்தையும் மேம்படுத்த உதவும் மிகச்சிறந்த எண்ணெய்களில் ஒன்றாக உள்ளது. இந்த எண்ணெயை காய்ந்திருக்கும் தோலில் போட்டு மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் தோலில் உள்ள வறண்ட பகுதிகள் பளபளப்பு பெறுவதோடு, மீண்டும் அழகுற காட்சியளிக்கும். எனவே தான், வெண்ணெய் பழ எண்ணெயை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது

மிகவும் உயர்வான தனித்த நிலையில் செறிவூட்டப்பட்ட பழமாக இருப்பதால் வெண்ணெய் பழம் இரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இதன் கொழுப்புகள் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. எனவே தான், வெண்ணெய் பழம் குறைவான சர்க்கரை உள்ளவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.

வலி நிவாரணி

மூட்டு வலிக்கு முதன்மையான மருந்தாக வெண்ணெய் பழம் உள்ளது. இதிலுள்ள எரிச்சலை தடுக்கும் பொருட்கள், மூட்டுகள் இணையும் இடத்தல் வரும் வலியைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. வெண்ணெய் பழத்தில் உள்ள கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்களுக்கு வலியை நீக்கும் தன்மைகள் உள்ளன. நெடுங்காலமாக இருக்கும் உடல் வலிகளையும் கூட வெண்ணெய் பழ எண்ணெய் மசாஜ் மூலம் குணப்படுத்த முடியும்.

அத்திப்பழம் ஜூஸ்We serve up the Fig Juice @ Rs.50Come and Taste it.🍹Also we sale Fig Fruitஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடை...
28/06/2018

அத்திப்பழம் ஜூஸ்

We serve up the Fig Juice @ Rs.50
Come and Taste it.🍹
Also we sale Fig Fruit

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடை குறைப்பு

நார்ச்சத்து அதிகமிருக்கும் பழங்களையும், உணவுகளையும் உண்ணுதல் எடை குறைப்புக்கு மிகவும் உதவும்.

மலச்சிக்கல்

புதிய அத்திப்பழங்கள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் இதை உண்ணுவதால், வயிற்றுப் பிரச்சனைகள் சீராகிறது. ஒவ்வொரு முன்று கிராம் பழத்திலும் 5 கிராம் நார்சத்து இருப்பது இதன் சிறப்பம்சம்.

கொழுப்புச்சத்தை குறைத்தல்

நார்ச்சத்து அதிகமுள்ள அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் போது உடலின் உள்ளே உள்ள கொழுப்பை வெளியேற்றுகிறது. தினமும் அத்திப்பழம் சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும்.

கரோனரி இதய நோய்கள்

அத்திப்பழத்தில் ஃபீனால் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை இயற்கையாகவே இதயத்திற்கு வலு சேர்த்து, இதய நோய்களை தவிர்க்க உதவும் சத்துக்களாகும்.

பெருங்குடல் புற்றுநோய்

அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தி, கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி புற்றுநோயை, குறிப்பாக குடல் புற்றுநோயை தடுக்கிறது.

உயர் இரத்த அழுத்தம்

உப்பு வடிவத்தில் சோடியம் அதிகமாகவும், பொட்டாசியம் குறைவாகவும் உட்கொள்ளும் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருகிறது. அத்திப் பழங்களில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. எனவே அத்திப் பழங்கள் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கும்.

மூலநோய்

ஜீரணத்திற்கு அத்திப்பழங்கள் பெரிதும் உதவுகின்றன. தினமும் அவற்றை உட்கொள்வது சிறப்பான ஜீரணத்திற்கு உதவி, மூலநோயில் இருந்து காக்கிறது.

எலும்புகளை பலப்படுத்தும்

அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.

மங்குஸ்தான் பழம்பழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை.Now we ...
03/06/2018

மங்குஸ்தான் பழம்

பழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை.

Now we sale the queen of fruit Mangosteen (Mangustan)

Benefits Of Mangosteen (Mangustan)

வாய் துர்நாற்றம் நீங்க

மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமடையும். கிருமிகளைக் கொள்ளும்.

மன அழுத்தம் போக்கும்

நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவைகளை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.

கண் எரிச்சலைப் போக்க

கனிணியில் வேலை செய்பவர்களுக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

சப்போட்டா ஜூஸ்We serve up the Sapota (Chikoo) Juice @ Rs.40Come and Taste it.🍹Also we sale Sapota (Chikoo)சப்போட்டா பழத்...
19/05/2018

சப்போட்டா ஜூஸ்

We serve up the Sapota (Chikoo) Juice @ Rs.40
Come and Taste it.🍹
Also we sale Sapota (Chikoo)

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்

கண்களுக்கு நல்லது

சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது மற்றும் ஆராய்ச்சியின் படி, அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட முயற்சிக்க வேண்டும்.

ஆற்றலுக்கு ஆதாரமானது

சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிக அளவு நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது, அதனால் சப்போட்டா பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.

அழற்சி எதிர்ப்பு ஏஜெண்ட்

டானின் அதிக அளவில் நிறைந்து இருப்பதால், சப்போட்டா அல்லது சிக்கு ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு ஏஜெண்ட் ஆகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், செரிமானப் பாதையை சரிச்செய்வதன் மூலம், அது உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.

குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்களை தடுத்தல்

வைட்டமின்கள் ஏ மற்றும் பி சத்தானது உடலின் சீத அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.

ஆரோக்கியமான எலும்புகள்

கூடுதல் அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன. இத்தகைய கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துக் காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.

மலச்சிக்கல் நிவாரணம்

சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து (5.6/100g) அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து, குடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது.

வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்

பாலிஃபீனாலி்க் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதன் காரணமாக, சப்போட்டா பல வைரஸ் எதிர்ப்பு, ஒட்டுண்ணிகளின் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மனித உடலில் நுழையும் பாக்டீரியாக்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் இப்பழத்திலிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்து, போலேட், நியாசின் மற்றும் பேண்டோதெனிக் அமிலம் போன்றவைகள் செரிமான அமைப்பு முறையின் செயல்பாட்டை அதிகரித்து, அதே சமயம் அதிலிருக்கும் வைட்டமின் சி, தீங்கு விளைவிக்கும் தீவிரப்போக்கினையும் அழிக்கிறது.

சளி மற்றும் இருமல்

சப்போட்டா பழத்தைத் சாப்பிடுவதால், மார்புகளில் சளித்தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவாசக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இருமலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

சிறுநீரக கற்கள்

சப்போட்டா பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளை தின்பதால், அது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாகச் (அதிகமாக வெளியேற்ற) செயல்படுத்தப் பயன்படுகின்றன. இதனால் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை மற்றும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது

சப்போட்டா பழம் மறைமுகமாக எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் இரைப்பையில் நொதிகளின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உடல் பருமன் ஆவதைத் தடுக்கிறது.

உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.

எலுமிச்சை ஜூஸ்* எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில...
12/02/2018

எலுமிச்சை ஜூஸ்

* எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.

* செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால், சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும், செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம்.

* இந்த எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால், அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து, தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.

* எலுமிச்சையின் ஒரு சிறந்த யாருக்கும் தெரியாத நன்மை என்று சொன்னால், அது எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது என்பது தான். அதுமட்டுமின்றி, அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.

* பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

* மேலும் எலுமிச்சை ஜூஸ், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சை சாற்றை தினமும் பருகினால், அழகாக சருமத்தை பெறலாம்.

* எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால், விரைவில் அதனை நீக்கலாம். மேலும் பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.

We serve up the Lemon Juice @ Rs.20
Lemon Syrup @ Rs.15
Come and Taste it.🍹
Also we sale Lemon

தர்பூசணி ஜூஸ்தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். எ...
16/12/2017

தர்பூசணி ஜூஸ்

தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். எனவே இத்தகைய தர்பூசணியை அப்படியே சாப்பிடவோ அல்லது அதனை முகத்தை பொலிவாக்கவோ பயன்படுத்தலாம்.

தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.

தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.

தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். எனவே சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.

முகத்தில் பருக்கள் இருந்தால், தர்ப்பூசணியின் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும்.

We serve up the Water Melon Juice @ Rs.25
Come and Taste it.🍹
Also we sale Water Melon

ஆரஞ்சு ஜூஸ்பித்த நீர் அதிகம் சுரப்பதை தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழங்களில் முக்கியமான ஒ...
27/11/2017

ஆரஞ்சு ஜூஸ்

பித்த நீர் அதிகம் சுரப்பதை தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் ரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

We serve up the Orange Juice @ Rs.50
Come and Taste it.🍹
Also we sale Orange Fruits

Address

134, Alagar Kovil Main Road, K. Pudur
Madurai
625007

Opening Hours

Monday 8am - 11pm
Tuesday 8am - 11pm
Wednesday 8am - 11pm
Thursday 8am - 11pm
Friday 8am - 11pm
Saturday 8am - 11pm
Sunday 8am - 11pm

Telephone

+91 452 256 0493

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pandiyan Juice Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share