Cook With Savithiri

Cook With Savithiri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cook With Savithiri, Kitchen/Cooking, Ponnamaravathi, Pudukkottai.

Welcome to Cook With Savithiri🧑‍🍳 | simple ingredient, traditional taste, home - style taste with traditional touch , authentic south Indian recipes/health tips and healthy recipes/
Follow our page for more details ❤️

சத்துக்கள் நிறைந்த காராமணி குழம்புசெய்முறை.முதலில் காரமணியை சுத்தம் செய்தல் வேண்டும்.பின்னர் அதை நன்றாக வேக வைத்து எடுக்...
18/08/2026

சத்துக்கள் நிறைந்த காராமணி குழம்பு

செய்முறை.
முதலில் காரமணியை சுத்தம் செய்தல் வேண்டும்.பின்னர் அதை நன்றாக வேக வைத்து எடுக்கவும்

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் சோம்பு சேர்த்து நன்றாக பொரிய விடவும்

பின்னர் அதில் வெங்காயம்,பூண்டு, பச்ச மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்

பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்
பின்னர் அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

பின்னர் அதில் கத்தரிக்காய் , ஊருளைகிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்

பின்னர் அதில் காராமணியை சேர்த்து வதக்கவும்,அதில் மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து வதக்கவும்

பின்னர் அதில் புளி கரைசலை ஊற்றி 20 மினிட்ஸ் வேக வைத்து எடுக்கவும்

நமக்கு தேவையான காராமணி குழம்பு ரெடி

சத்தான கேரட் பீன்ஸ் பொரியல் செய்முறைஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு,வரமிளகாய் கருவே...
13/08/2026

சத்தான கேரட் பீன்ஸ் பொரியல் செய்முறை

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு,வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்

பின்னர் அதில் சிறிதளவு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

பின்னர் அதில் கேரட் பீன்ஸ், சேர்த்து கிளறவும், பின்னர் அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்

பின்னர் அதில் சிறிதளவு மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து வதக்கவும்

பின்னர் அதில் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

நமக்கு தேவையான கேரட், பீன்ஸ் பொரியல் ரெடி

ருசியான கேரட் முட்டை பொரியல் செய்முறைஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் சிறிதளவு கருவேப்பிலை  ,ஒரு பச்ச மிளகாய் சேர்க்கவும்...
04/08/2026

ருசியான கேரட் முட்டை பொரியல் செய்முறை

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் சிறிதளவு கருவேப்பிலை ,ஒரு பச்ச மிளகாய் சேர்க்கவும்

பின்னர் அதில் கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்னர் அதில் சிறிதளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

பின்னர் அதில் முட்டையை சேர்த்து நன்றாக வதக்கவும்

பின்னர் அதில் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து இறக்கவும்

நமக்கு தேவையான கேரட் முட்டை பொரியல் ரெடி

சத்தான முருங்கைக்கீரை ராகி களி செய்முறைஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பையும் சேர்த்து கிளறவும்.பின்...
22/07/2026

சத்தான முருங்கைக்கீரை ராகி களி செய்முறை

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பையும் சேர்த்து கிளறவும்.
பின்னர் அதில் சிறிதளவு வெங்காயம்,கருவேப்பிலை, பச்ச மிளகாய் சேர்த்து கிளறவும்
பின்னர் அதில் முருங்கை கீரை இலை சேர்த்து வதக்கி பின் அதில் உப்பு , தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும்

பின்னர் ராகி மாவு சேர்த்து கிளறவும் ,பின்னர் அதை உருண்டை பிடித்து கொள்ளவும்

நமக்கு தேவையான ராகி களி ரெடி

எங்கள் தோட்டத்தில் பறித்த தேங்காய்தேங்காயை அரைத்து வடி கட்டி சாறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதுஆரோக்கியம் நிறைந்த ஒரு...
18/07/2026

எங்கள் தோட்டத்தில் பறித்த தேங்காய்

தேங்காயை அரைத்து வடி கட்டி சாறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது

ஆரோக்கியம் நிறைந்த ஒரு உணவு

தேங்காய் சாப்பிடும் போது சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள் சுவை அதிகரிக்கும்
16/07/2026

தேங்காய் சாப்பிடும் போது சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள் சுவை அதிகரிக்கும்

மீன் வறுவல் செய்முறைமீனை நன்றாக கழுவி சுத்தம் செய்தல் வேண்டும்பின்னர் அதில் மஞ்சள் தூள் , உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிள...
15/07/2026

மீன் வறுவல் செய்முறை

மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்தல் வேண்டும்

பின்னர் அதில் மஞ்சள் தூள் , உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்

அதில் சிறதளவு லெமன் சேர்த்து கிளறவும்

பின்னர் தோசை கல்லில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அதில் மீனை சேர்க்கவும்

இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்

நமக்கு தேவையான மீன் வறுவல் ரெடி

மீன் வறுவல் செய்வதற்கு சீக்ரெட் மசாலா தேவையான பொருட்கள்கடலை பருப்புஉளுந்தம் பருப்புகாய்ந்த மிளகாய்மஞ்சள் தூள்மல்லி விதைச...
13/07/2026

மீன் வறுவல் செய்வதற்கு சீக்ரெட் மசாலா

தேவையான பொருட்கள்
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
காய்ந்த மிளகாய்
மஞ்சள் தூள்
மல்லி விதை
சீரகம்
வேர்க்கடலை
வெந்தயம்
மிளகு
உப்பு

பாதாம் பிசின் பாயாசம் செய்முறைபாதாம் பிசினை இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்பின்னர் தேங்காய் துருவலை மிக்சி ஜ...
11/07/2026

பாதாம் பிசின் பாயாசம் செய்முறை

பாதாம் பிசினை இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்

பின்னர் தேங்காய் துருவலை மிக்சி ஜாரில் சேர்த்து அதில் முந்திரி பருப்பு,பாதாம் சேர்த்து பால் எடுத்து கொள்ளவும்

பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலை ஊற்றி அதில் ஊறவைத்த பாதாம் பிசினை சேர்த்து கிளறவும்

பின்னர் அதில் முந்திரி,பாதாம் கட் பண்ணி சேர்த்து சாப்பிடலாம்

நமக்கு தேவையான பாதாம் பிசின் பாயாசம் ரெடி

பாதாம் பிசின் பாயாசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்6 to 8 மணி நேரம் ஊற வைத்த பாதாம் பிசின்தேங்காய் பால்நாட்டுசார்க்கரைமுந...
11/07/2026

பாதாம் பிசின் பாயாசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்

6 to 8 மணி நேரம் ஊற வைத்த பாதாம் பிசின்
தேங்காய் பால்
நாட்டுசார்க்கரை
முந்திரி
பாதாம் பருப்பு

Address

Ponnamaravathi
Pudukkottai
622407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cook With Savithiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share