Aaranya Terrace / Kitchen Gardening

Aaranya Terrace / Kitchen Gardening We help you to set up an organic kitchen garden at any amount of available space.

29/06/2026

செம்பருத்தி பூ டீ (Hibiscus flower) பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
1. செம்பருத்தி பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறிப்பாக அந்தோசையினின்கள் மற்றும் பாலிபினால்கள் அதிகம் உள்ளதால் இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து செல் சேதத்தைக் கட்டுப்படுத்துவதால் இளமையைத் தக்க வைக்கிறது.

2. இரத்த நாளங்களைத் தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் உயர் இரத்த அழுத்தத்தைக் (Hypertension) குறைக்க உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் இதய நலன் பாதுகாக்கப் படுகிறது.

3. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
செம்பருத்தி LDL (கெட்ட) கொலஸ்ட்ராலைக் குறைத்து, HDL (நல்ல) கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது, இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

4. செம்பருத்தி டீ யில் விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் விட்டமின் சி யும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

5. செரிமானத்தை மேம்படுத்துகிறது செம்பருத்தி பூவில் உள்ள இயற்கை அமிலங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகின்றன.

6. உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை நீக்க உதவுவதால் மிகச் சிறந்த டீடாக்ஸ் பானமாகத் திகழ்கிறது

7. எடை இழப்புக்கு உதவுகிறது.
செம்பருத்தி தேநீர், கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை குறைத்து, கொழுப்பு எரிப்பை ஊக்குவிக்கிறது, இது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.

8. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கவும், முதுமையை தாமதப்படுத்தவும் உதவுகின்றன.

9. செம்பருத்தியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

10. செம்பருத்தி பூ தேநீர் கல்லீரலில் உள்ள நச்சுகளை அகற்றவும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

11. செம்பருத்தி தேநீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

One Box 100 grams 275rs (one serve= ₹8.33)

📱9600800221
🌐 aaranyapasumaikudil.com

செய்முறை; அரை ஸ்பூன் 3 கிராம் அளவு எடுத்து ஒரு கப் 150 ml தண்ணீருடன் கொதிக்க விட்டு வடிகட்டி அத்துடன் சிறிது இனிப்பு சேர்த்தோ. சேர்க்காமலோ பருகலாம்.

சில துளிகள் எலுமிச்சை 🍋 சாறு சேர்த்து குடிப்பது மேலும் சிறப்பான பலனைத் தரும்.

#ஆரண்யாபசுமைக்குடில் #செம்பருத்திபூடீ #மூலிகைடீ

*Happy Slim*உடலில் உள்ள சத்து குறையாமல்,  ஊளைச் சதையை மட்டும் குறைக்கும் கருப்புக் கொள்ளு, குடம்புளி வெயிட் லாஸ் கஞ்சி* ...
08/06/2026

*Happy Slim*

உடலில் உள்ள சத்து குறையாமல், ஊளைச் சதையை மட்டும் குறைக்கும் கருப்புக் கொள்ளு, குடம்புளி வெயிட் லாஸ் கஞ்சி*

*செய்முறை*

1. மூன்று ஸ்பூன் ( அல்லது தேவையான அளவு ) ஆரண்யா "ஹேப்பி ஸ்லிம்" பவுடரை இரண்டு டம்ளர் ( சுமார் 350 மில்லி) தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

அதை அடுப்பில் சிறு தீயில் (சிம்மில்) வைத்து அடிப் பிடிக்காதபடி கிளறி வேக வைக்கவும். தேவையான உப்பு சேர்த்தால் "வெயிட் லாஸ் கஞ்சி தயார்!"

இதைக் காலை, மதியம், இரவு என எந்த நேரத்திலும் ஒரு வேளை உணவாக எடுத்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் லேசாக மாறுவதை உணரலாம்.‌

இதை முழு உணவாக காலை அல்லது இரவு நேரத்தில் எடுப்பது மேலும் விரைந்து பலன் தரும்.

அப்படி எடுக்கும் போது கீழ் கண்ட
காய்கறி கீரை வகைகளில் எதெல்லாம் உங்களிடம் இருக்கிறதோ அதில் ஒரு கப் சேர்த்து எடுத்துக் கொள்வது சிறப்பு. இதனால் வயிறு நிறைந்த உணர்வும் கிடைக்கும் அதே சமயம், நார்ச் சத்து மற்றும் சேர்க்கும் காய்கறிகளில் உள்ள சத்தும் சேர்த்துக் கிடைக்கும்.

*கஞ்சியில் சேர்க்கக்கூடிய காய்கறிகளின் விபரம்*

1.வெண்பூசணி
2.சுரைக்காய்
3.முள்ளங்கி
4. சௌ சௌ
5. புடலங்காய்
6. பீர்க்கங்காய்
7. வாழைத்தண்டு
8. முருங்கைக்கீரை மற்றும் அனைத்து வகையான கீரைகள்.
9. கொத்தமல்லி கறிவேப்பிலை புதினா
10. வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி

*குறிப்பு*
களைப்போ, சோர்வோ, சக்தி இழப்போ இல்லாமல் ஒரே மாதத்தில் ஐந்து கிலோ வரை எடை குறையும்.

உடல் எடை விரைவில் குறைய, காலை உணவாக இதை எடுத்துக் கொள்ளவும் .

மதிய உணவில் அரிசி சாதம் ஒரு கப் காய்கறி மூன்று கப் என்ற அளவில் எடுக்கவும். மற்றும் வெண்ணெய் எடுத்த மோரை அதிகப்படி சேர்க்கவும்.

இரவு உணவு எளிதில் ஜீரணம் ஆகும் படி இருக்கட்டும். முடிந்த வரை இனிப்புச் சுவையை தவிர்க்கவும்.

உடலுக்கு மேலும் வடிவும், அழகும், பொலிவும், பலமும் ஊட்ட நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

*இன்க்ரிடியன்ட்ஸ்*
குடம்புளி ரசத்தில் முளைகட்டிய கருப்புக் கொள்ளு,
பாரம்பரிய அரிசி வகைகள்,
முருங்கை , சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், ஓமம்.

250 கிராம் / 225₹
Order Now
aaranyapasumaikudil.com

9600800221



#நஞ்சில்லாநல்லுணவு

AaranyaPasumaikudil  Benefits* ✅  Golden Turmeric Latte ஒரு சுவையான  ஆரோக்கியமான பானம். ✅ இதன் முக்கிய மூலப்பொருள் மஞ்சள...
03/06/2026

AaranyaPasumaikudil
Benefits*
✅ Golden Turmeric Latte ஒரு சுவையான ஆரோக்கியமான பானம்.
✅ இதன் முக்கிய மூலப்பொருள் மஞ்சள். மஞ்சள் மற்றும் என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது.
✅ மஞ்சளில் உள்ள வேதிப் பொருளான #குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதுவே பலவிதமான நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.
✅ மஞ்சளிலுள்ள சிறந்த பண்பு உடலினுள் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது.
✅ இதன் anti viral, anti bacterial, anti fungal பண்புகள் பல்வேறு நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
✅ வைரஸ் தொற்றினால் ஏற்படும் இருமல், சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட, குறிப்பாகக் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பெரும் அளவில் உதவுகிறது.
✅ இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
✅ நுரையீரல் நலம் மற்றும் இதயத்திற்கும் நல்லது.
✅ செரிமானத்தை மேம்படுத்துகிறது.
✅ ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
✅ தோலுக்கு பளபளப்பையும் பொலிவையும் கூட்டுகிறது.
✅ மஞ்சள் அறியப்பட்ட சக்திவாய்ந்த (Antioxidant)ஆக்ஸிஜனேற்றியாகும். இதனால் உடல் விரைவில் முதுமையாவது தடுக்கப்படுகிறது.
✅ மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், அல்சைமர் மற்றும் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கவும் குர்குமின் உதவுகிறது, என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.
✅ மஞ்சள் பால் கீல்வாதத்தின் அறிகுறிகளைப் போக்கவும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
✅ பாலுடன் உட்கொள்ளும் போது அது பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியத்தை அளிக்கிறது.
✅ பால் பிடிக்காதவர்கள் தேங்காய், வேர்க்கடலை, பாதாம் ஆகியவற்றை அரைத்து எடுத்து அதன் பாலுடன் சேர்த்தும் குடிக்கலாம். இதனால் இவற்றில் உள்ள நல்ல கொழுப்பில் குர்குமின் கரைந்து நம்முடல் அதை விரைவில் ஏற்றுக்கொள்ள சுலபமாக அமைகிறது.
✅ மேலும் ஆரண்யா பசுமைக்குடில் #கோல்டன்_டர்மரிக்_லாட்டே வில் சேர்க்கப்படும் மற்ற முக்கிய பொருட்களான அஸ்வகந்தா, அதிமதுரம், திப்பிலி, கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் இஞ்சி போன்ற மசாலாப் பொருட்கள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன.
✅ இன்னும் என்ன...?
✅ பழங்காலம் தொட்டு நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த ஆரோக்கிய பானம்.
✅ இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
✅ தேநீர் மற்றும் காபிக்கு ஆரோக்கியமான மாற்று.
✅ முழு சைவ உணவு உண்பவர்களுக்கும் ஏற்றது.
✅ பாலுக்குப் பதிலாக வெந்நீர் அல்லது தண்ணீருடனும் சாப்பிடலாம். 🧡 செயற்கையான சுவைகள், நிறங்கள், preservatives எதுவும் சேர்க்கப்படவில்லை.
🧡 இயற்கையான மூலிகை பொருட்கள் மட்டுமே. 🎉🔔
"எப்படிப் பயன்படுத்துவது? "
🧡 சூடான பால் அல்லது சூடான அல்லது குளிர்ந்த நீரில் 1/2 தேக்கரண்டி கோல்டன் டர்மரிக் லாட்டே இம்யூனிட்டி பூஸ்டர் பவுடர் சேர்க்கவும். நன்றாகக் கலக்கி இனிப்பு சேர்த்தோ சேர்க்காமலோ பருகவும்.
📱9600800221
🌐 aaranyapasumaikudil.com

உணவில்  #சர்க்கரை சேர்க்க விரும்பாதவர்கள் சுலபமாகச் செய்து கொள்ள ஒரு சிற்றுண்டி! உங்கள் நாளை ஆரோக்கியமாகத் தொடங்குங்கள் ...
28/05/2026

உணவில் #சர்க்கரை சேர்க்க விரும்பாதவர்கள்
சுலபமாகச் செய்து கொள்ள ஒரு சிற்றுண்டி!

உங்கள் நாளை ஆரோக்கியமாகத் தொடங்குங்கள் ஆரண்யா பசுமைக்குடிலின் #சர்க்கரைஇல்லாத_மியூஸ்லியுடன் .
பாரம்பரிய அரிசி அவல்,
சிறு தானிய அவல், ஊட்டச்சத்து நிறைந்த விதைகள், மற்றும் பாதாம் ஆகியவற்றின் இயற்கை ஆரோக்கியம் நிறைந்து. *சர்க்கரை / இனிப்பு இல்லாதது* இது, சரிவிகித சத்து மற்றும் சுவைக்கான உங்கள் ஆரோக்கியமான தேர்வாகும்.

சேர்மங்கள்:

தங்க சம்பா அவல், சிவப்பரிசி அவல், கோதுமை ஃப்ளேக்ஸ், சாமை அவல், சோளம் ஃப்ளேக்ஸ், பார்லி ஃப்ளேக்ஸ், ரோல்ட் ஓட்ஸ், பூசணிவிதை, ஆளி விதை, பாதாம், உப்பு.

செய்முறை:
ஒரு கப் *சுகர் ஃப்ரீ* மியூஸ்லியுடன், ஒரு கப் சூடான பால் சேர்த்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
*இதைப் பால் சேர்க்காமலும் உட்கொள்ளலாம்.*
இரவு நேர உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
விலை 250 கிராம்; 140₹
ஆர்டர் செய்ய;
https://wa.me/p/31553832474260151/919600800221

aaranyapasumaikudil.com

24/05/2026

#தையல்சிட்டுTailorBird

சுமார் 10–12 செ.மீ. அளவு மட்டுமே இருக்கும் அழகான சிறிய பறவை!

மனிதர்களிடம் அதிகம் பயப்படாது. நாம்தான் எதையும் கூர்ந்து கவனிக்க மாட்டோமே! அதனால் நமது கண்ணுக்கு அதிகம் தட்டுப் படாது. 😊.

நம்மைச் சுற்றி வளரும் செடிகள், குறு மரங்கள்தான் இதன் வாழ்விடம். பார்க்கக் கிடைக்காதென்றில்லை காலை நேரத்தில் ட்வீ...க்க்.... ட்வீ...க்க் என்று இடைவிடாத கூவலைக் கேட்டால் அது இவர்கள்தான் என அறிக! பார்த்தால் அந்தச் சின்னத் தொண்டையிலிருந்து இவ்வளவு கூர்மையான சத்தமா என்று நமக்குப் பிரமிப்பாக இருக்கும்.

நல்ல கூர்மையான வளைந்த அலகுடன், தலை மேல் பழுப்பு மஞ்சள் தொப்பி , மேல் உடல் காக்கிப் பச்சை, மார்பு வயிறு வெள்ளை நிறம் என நிறங்கள் கூடி அவ்வளவு அழகாக இருக்கும். குட்டி வால் எப்போதும் மேல் நோக்கி விரைப்பாகவும் ஆடிக் கொண்டும் இருக்கும்.‌

தையல் சிட்டு அல்லவா? ஆம்! தையலேதான்!!

இரண்டு பெரிய இலைகளைத் தேர்ந்தெடுத்து, அல்லது ஒரே இலையின் இரு விளிம்பில் தன் கூர்மையான அலகால் துளைகளைப் போடும்.

அந்தத் துளைகளை நார் , தாவர இழைகள், பஞ்சு நூல், பட்டுப்பூச்சி நூல் போன்றவற்றால் இணைத்து கூடு பிரிந்து விடாமல் இருக்க முடிச்சிட்டு க்ராஸ் தையல் அமைப்பில் ஒரு பை போல தைக்கும். ( ஒரு முறை மஞ்சள் உல்லன் நூலால் தைத்து இருந்ததை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறேன்)

அதற்குள் மென்மையான புல் வைத்து பாதுகாப்பான கூடு கட்டும்.

கூடு வெளியிலிருந்து தெரியாது.

இது கட்டும் கூடு இலைகளுக்குள் மறைந்து இருப்பதால், எதிரி பறவைகள் மற்றும் பாம்புகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும். பொதுவாக 2 முதல் 4 முட்டைகள் இடும்.

முட்டையிட்ட பிறகு 12 முதல் 14 நாட்களில் குஞ்சுகள் பொரியும்.

அதன் பிறகு சுமார் 10 நாட்கள் வரை கூட்டில் இருந்து பெற்றோர் உணவளித்து பராமரிக்கும். மொத்தத்தில் 25 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை கிளையில், தண்டில் ஒட்டி இருக்கும் இலையுள்ள தாவரம்தான் இதன் வீடு😊😊.‌ எப்படிக் கண்டுபிடித்து தேர்த்தெடுக்கும் என்று வியப்பில் ஆழ்த்துகிறது இல்லையா?

இது சிறிய பூச்சிகள், சிறிய வண்டுகள், இலைப்புழுக்கள் போன்றவற்றைச் சாப்பிடும்.

அதனால் விவசாயத்திற்கும் வீட்டுத் தோட்டங்களுக்கும் நண்பன்.

இங்கே நீங்கள் பார்ப்பது மாடித் தோட்டத்தில் தையல் சிட்டு கூடு. 😍😍

இயற்கை பிரமாண்டத்தின் முன் நம் வாழ்வென்பது தையல் சிட்டு தேர்ந்தெடுக்கும் ஒரு இழையின் அளவு கூட இல்லை என்றாலும் நுண்ணிய முறையில் முக்கியத்துவமானதும்தான்.



#தையல்சிட்டு

🌿 Aaranya Pasumaikudil✨ Miracle Coolant Oil ✨உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி தரும் இயற்கை தைலம்.😴 “தூக்கம் வரலையா…? இதை...
14/04/2026

🌿 Aaranya Pasumaikudil
✨ Miracle Coolant Oil ✨

உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி தரும் இயற்கை தைலம்.

😴 “தூக்கம் வரலையா…? இதை try பண்ணீங்களா?”
இன்றைய வேகமான வாழ்க்கை…
📱 Mobile
💻 Computer
😓 Stress
👉 இவை எல்லாம் சேர்ந்து உங்கள்
உறக்கத்தையும் உடல் சமநிலையையும் கெடுக்கும்.
💜 இதோ தீர்வு:
🌿 ஆமணக்கு + புன்னை விதைகள்+ பசு நெய்
🪻 லாவண்டர் + 🌸ரோஜா +
🌼மகிழம்பூ + 🌱மருதாணி
👉 இவை சேர்ந்து உருவான
100% இயற்கை ஆயில்.

“Miracle Coolant Oil”
🔥 பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

🔖 ஆழ்ந்த & நிம்மதியான உறக்கம் 😴
🔖 கண் எரிச்சல், dryness குறையும் 👁️
🔖 உடல் சூடு குறையும் ❄️
🔖 முகம் பளபளப்பு ✨
🔖 மூட்டு வலி நிவாரணம் 🦵
🔖 மன அமைதி 🧘‍♀️

💧 எப்படி பயன்படுத்துவது?
👉 தூங்கும் முன்:
🎯 கண் இமை மேல் – 1 சொட்டு
🎯 தொப்புள் – 3 சொட்டு + மசாஜ்
🎯 கால் பெருவிரல் – 1 சொட்டு
👉 Extra:
முழங்கால் வலி இருந்தால் – அங்கேயும் apply செய்யலாம்.

⚠️ கவனம்:
❌ சைனஸ் உள்ளவர்கள் – பெருவிரலில் வைக்க வேண்டாம்.

👉 “நான்கைந்து மணி நேரம் தான் தூங்கினாலும்… 7 மணி நேரம் தூங்கின feel!”

🔥 இன்றே உங்கள் Sleep Quality மாற்றுங்க!
📦 இப்போதே Order பண்ணுங்க!
📞 9600800221

https://wa.me/p/7923719827727760/919600800221
🌐 aaranyapasumaikudil.com .






🎉*பொங்கல் ஆஃபர்*🎉மூன்று நாட்களுக்கு மட்டும் 💥 *அசத்தல்*ஆஃபர் விலையில் 💥 *ஆரண்யா பசுமைக்குடில் மசாலா பொருட்கள்*பத்து வகைய...
10/01/2026

🎉*பொங்கல் ஆஃபர்*🎉

மூன்று நாட்களுக்கு மட்டும் 💥
*அசத்தல்*ஆஃபர் விலையில் 💥 *ஆரண்யா பசுமைக்குடில் மசாலா பொருட்கள்*
பத்து வகையான மசாலா ₹450 மட்டுமே 🥳🥳.‌
*அதிரடி ஆஃபர் ஷிப்பிங் சார்ஜும் ஃப்ரீ*. உடனே whatsapp ஆர்டர் செய்யுங்கள்.
9600800221.

Address

Salem
636004

Telephone

09600800221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaranya Terrace / Kitchen Gardening posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aaranya Terrace / Kitchen Gardening:

Shortcuts

Share

Category