Sri vigneshwara agro farm

Sri vigneshwara agro farm Sri vigneshwara agro farm
Sericulture,Cattle,Flowers
Nursery Garden and Coconut trading

11/01/2025

From 2010 🌾 கொஞ்சம் படியுங்கள் ஒரு நிமிடத்தில் முடிந்து விடும் 👉 ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் மட்டும் ...!!!

ஒரு 13 வருடங்கள் மருத்துவத்துறையில் வேலை செய்து கொண்டிருந்தேன்... அப்போது அங்கு வரும் நோயாளிகளின் உடைய வேதனைகளை உணர முடிந்தது

என்னடா இந்த வாழ்க்கை என்று உணர தோன்றியது

நகரத்தில் இருப்பவர்கள் தான் நரக வேதனைப்படுகிறார்கள் எல்லா நோய்களும் வருகிறது என்றால் ... கிராமத்தில் எனது சொந்தங்களுக்கு விவசாயிகளுக்கு கூட எல்லா வியாதிகளும் வந்துவிட்டது என்ற ஒரு கேள்வி எனக்குள் ?

விடை தேடிய போது நம்மாழ்வாரின் புத்தகங்கள் தான் எனக்கு பதில் சொல்லியது.

ஒரே காரணம் உணவு உணவு உணவு..😰

நாம் தலைமுறைகள் தான் நஞ்சை உணவாக உட்கொள்கிறோம்.

நமது மகனாவது நஞ்சில்லா உணவை உட்கொள்ள வேண்டும் என்று அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு..!

முடிந்த வரை நாம் உண்ணக்கூடிய உணவுகளை நாமே இயற்கை முறையில் விவசாயம் செய்து எனது மகனை நோயில்லா மகனாக உருவாக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தில் தான் நான் இன்று இதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.

என் மகனை ஒரு பொறியாளராகவோ மருத்துவராகவோ உருவாக்குவது இந்த காலத்தில் எளிது ... ஆனால் ஆரோக்கியமான மனிதனாக உருவாக்குவது தான் கடினம் .... ஆரோக்கியமாக வாழ்ந்தால் மட்டுமே அங்கு நிம்மதியும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் இருக்கும் இனிவரும் காலங்களில் ... என்பதை உணர்ந்து அவனை ஒரு ஆரோக்கியமான மனிதனாக உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

மிகப்பெரிய அளவில் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் மாட மாளிகை கட்டாமல் ... பல லட்சங்களில் வாகனங்களை வாங்கி குமிக்காமல் ... உங்கள் மகனும் மகளும் இனிவரும் காலங்களில் நஞ்சு இல்லா உணவை உண்ணுவதற்கான வழிவகையை செய்ய முற்படுங்கள் அதுவே மிகப்பெரிய எதிர்காலம் 🫰

அன்புடன் உங்கள் 🙏
🍀 இயற்கையாளன் தவம்

" விவசாயியாக மாறாதே" .... நான் சொல்வது கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும் 🌾 விவசாயி மகன்களே கொஞ்சம் இதை படியுங்கள் நேரம் ஒத...
07/01/2025

" விவசாயியாக மாறாதே" .... நான் சொல்வது கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும் 🌾 விவசாயி மகன்களே கொஞ்சம் இதை படியுங்கள் நேரம் ஒதுக்கி 🙏 நான் கடந்த வாரம் ஒரு காணொளி வெளியிட்டிருந்தேன்... நான் ஏன் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்தேன் என்று..!

அந்த காணொளியை பார்த்துவிட்டு அனைவரும் நானும் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வரப்போகிறேன் என்று நிறைய பேர் பதிவு பண்ணி இருந்தார்கள் அதனால் தான் இந்த பதிவு

விவசாயி மகன்களே நீங்கள் நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக சில அழுத்தங்கள் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் இருக்கத்தான் செய்யும் ஒரு 15 வருடங்கள் வேலை செய்து உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள் பொருளாதாரத்தில் மேம்படுத்திக் கொள்ளுங்கள்

ஒரு 10 லிருந்து 20 லட்சம் கையில் வைத்துக் கொண்டே நீங்கள் விவசாயியாக மாற முற்பட வேண்டும்

நமது பாட்டனும் நமது முப்பாட்டனும் பார்த்த விவசாயம் என்பது வேறு இப்போது இருக்கக்கூடிய விவசாயம் என்பது வேறு இப்போது செய்யக்கூடிய விவசாயத்தில் எந்த ஒரு பொருளாதார முன்னேற்றமும் இல்லை

எனவே நீங்கள் திட்டமிட்டு ஒரு ஒருங்கிணைந்த பண்ணை உருவாக்க வேண்டும் ஒரு ஐந்து ஏக்கரில் அப்போதுதான் நீங்கள் பொருளாதாரத்தில் முன்னேற முடியும்

சின்ன சின்ன வயல்களை வைத்துக்கொண்டு நான் விவசாயம் செய்து முன்னேற போகிறேன் என்பது இன்றைய காலகட்டத்தில் முட்டாள்தனம்

அதை உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்

எனவே யாரும் குறிப்பாக 🌾விவசாயி மகன்களே நீங்கள் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வர வேண்டாம்

விவசாயம் செய்ய ஆசைப்பட்டால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஐந்து ஏக்கர் நிலம் வாங்க வேண்டும் ஒரே இடத்தில் ...

பிறகு அந்த இடத்தில் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

இரண்டாவதாக அதைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும்

மூன்றாவதாக அங்கு நல்ல நல்ல பலன் தரக்கூடிய மரங்களை முதலில் வளர்க்க வேண்டும்

பிறகு தினமும் தினம் தினம் வருமானம் வரும் அளவிற்கு உங்களை தயார் செய்ய வேண்டும்

குறிப்பாக ஒரு 50 கோழிகள் வளர்க்கலாம்

இரண்டு பசு மாடுகள் வளர்க்கலாம்

ஒரு எருமை மாடு வளர்க்கலாம்

ஐந்து வெள்ளாடு வளர்க்கலாம்

ஒரு பத்து வாத்து வளர்க்கலாம்

சின்ன குளம் வெட்டி நமக்காக மீன் வளர்க்கலாம்

நாம் பயன்படுத்த கூடிய அளவிற்கு அனைத்து காய்கறிகளையும் அங்கு மிகக் குறைந்த இடத்தில் உருவாக்க வேண்டும்

இவையெல்லாம் சாத்தியப்படுத்திவிட்டு சாத்தியம் என்றால் மட்டும் நீங்கள் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வர வேண்டும்

இல்லையென்றால் நீங்கள் வேலை பார்க்கும் போது இருந்த மன அழுத்தத்தை விட இங்கு அதிகமான மன அழுத்தத்தை உணர வேண்டி இருக்கும்

பிறகு அனைத்து பொருளாதாரத்தையும் இழந்து மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டி இருக்கும்

எனவே விவசாயி மகன்களை கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள்

ஆலோசனை வேண்டுமென்றால் whatsapp 077083 56445 மூலம் தொடர்பு கொள்ளுங்கள் .

நன்றி அன்புடன் உங்கள் .
இயற்கையாளன் தவம்

கழிவநீர் கலப்பதால் ஆகாயத்தாமரை வளர்கிறது.இது ஒரு நாளைக்கு ஒரு செடி 1 லிட்டர் நீரை ஆவியாக்குகிறது எனில்  நீர்நிலைகளிலிருந...
04/04/2024

கழிவநீர் கலப்பதால் ஆகாயத்தாமரை வளர்கிறது.இது ஒரு நாளைக்கு ஒரு செடி 1 லிட்டர் நீரை ஆவியாக்குகிறது எனில் நீர்நிலைகளிலிருந்து எவ்வளவு நீர் ஆவியாகும் என பாருங்கள்.

இதை கட்டுப்படுத்த இரண்டு மூன்று தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் மூலம் அல்லது இயந்திரங்கள் மூலம் தாமரையை நீரிலிருந்து அகற்றுவது வழக்கம். அதே நேரத்தில் AG11 எனும் அங்கக திரவத்தை தாமரையின் மீது தெளித்தால் 10-15 நாட்களில் செடிகள் காய்ந்துவிடும். அதன்பிறகு அதை எடுப்பது எளிது.

நீரிலிருந்து வெளியே எடுத்த தாமரைச்செடிகளின் தண்டு பகுதிகள் பச்சையாக இருக்கும். அதன்மீது மீண்டும் ஒருமுறை AG11. திரவம் தெளித்து காய வைக்க வேண்டும். பிறகு அவைகளை திட்டு திட்டாக அடுக்கி வைத்து மண்புழுக்களை விட்டு மண்புழு உரமாக மாற்ற வேண்டும். அது பேரூட்டச்சத்துக்கள் நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உரமாக மாறும்.

பிறகு அந்த நீர்நிலைகளில் நுவால்கி நுண்ணூட்ட திரவத்தை தெளித்தால் ஆகாயத்தாமரைச் செடிகள் வளராது. மாறாக டை ஆட்டம் (Diatom) எனும் கண்ணுக்கு தெரியா பாசிகளை வளர்க்கும். அது மீனுக்கு உணவாகும்.

நீர்நிலைகளில் எவ்வளவு கழிவுநீர் உள்ளே வந்தாலும் வருடத்திற்கு நான்கு முறை நுவால்கி திரவத்தை தெளித்தால் நீர்நிலைகளில் தாமரை வளராது. நீர்நிலைகளும் சுத்த மாக்கப்படும். இந்த முறையை உதகை ஏரியில் கடைப்பிடித்தோம். கரைந்துள்ள உயிர்காற்று 50 அடி ஆழத்தில் (Dissolved Oxygen ) லிட்டருக்கு 1-மிகி லிருந்து 5 மி கி என உயர்ந்தது. மிக எளிமையான செலவு குறைந்த தொழில் நுட்பம்.

தேவைப்படுவோர் தொடர்பு கொள்க. நன்றி..

முனைவர் இரா. இளங்கோவன்
9443330394 7904519849
. பசுமை வணக்கம்

17/02/2024

ஒரு விவசாயியாக ஒரு வேண்டுகோள்..

"துரவு" பற்றித் தெரிந்து கொள்வோமே...   —   ஊரிலுள்ள ஒரு நிலக்கிழாரைப் பார்த்து, "அவருக்குத்தோட்டம், துரவுஎல்லாம் இருக்கு...
30/01/2024

"துரவு" பற்றித் தெரிந்து கொள்வோமே...

— ஊரிலுள்ள ஒரு நிலக்கிழாரைப் பார்த்து, "அவருக்குத்தோட்டம், துரவுஎல்லாம் இருக்கு..."- என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.

— 'தோட்டம்'- சரி. அது என்ன, 'துரவு'...?

பெரிய அளவில் பாசனத்துக்குப் பயன்படும் கிணறுதான், 'துரவு'.

இன்று, "துரவு"- என்ற சொல்லையே நாம் துறந்துவிட்டோம்.

— இதன் நீள அகலம், 1:1, 1:2, 1:3 என்ற விகிதத்தில் அமைய வேண்டும் என விளக்குகிறார் கொடுமுடி ச. சண்முகம்.

— 'கிணறு தோண்டுதல்'- முதலிய கட்டுமானங்களை விளக்கும், ‘மயமதம்’- எனும் ஒரு பொறியியல் நூல் நம்மிடம் இருந்ததாக இவர் குறிப்பிடுகிறார்.

— அகலமான கிணறுகள் மட்டுமன்றி, ஆழமான கிணறுகளும் நம்மிடம் இருந்தன.

— 'நெடுங் கிணற்று வல் ஊற்று உவரி தோணி’ – (97-98) என்கிற, 'பெரும்பாணாற்றுப்படை' வரி, தொண்டை மண்டலத்தில் ஆழமாகத் தோண்டப்பட்ட கிணற்றைப் பற்றிக் கூறுகிறது.

இதேபோல் கிணறு வெட்டும் ஆடவர்கள், தீப்பொறி உண்டாகப் பாறைகளை வெட்டி பாலை நிலத்தில் கிணறு தோண்டியிருந்த காட்சியை, ‘வன்புலம் துமியப் போகிக்…’ என அகநானூறு (79:6) விவரிக்கிறது. ஆனால், இவ்விரு பாடலுமே ஒரே செய்தியை தெரிவிக்கின்றன. இப்படித் தோண்டப்பட்ட கிணற்றில், உவர்நீர்தான் கிடைத்தது என்பதே அது. இது பாறையின் தன்மையினால் ஆனது.

இன்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மிக வறண்ட பகுதிகளில், ‘காராளன்_கிணறு’- என்றழைக்கப்படும் பாசனக் கிணறுகள் உள்ளன.

— பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல் கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்.
(மூன்றாம் பத்து - பாட்டு 22: 12-14)

- என்கிற, 'பதிற்றுபத்துப் பாட்டில்' வேறொரு கிணற்றைப் பற்றிய காட்சி விளக்கப்படுகிறது.

— கரும்பொன்'- எனும் இரும்புக் கோடரியால், வன்மையான பாறை நிலத்தை உடைத்து தோண்டப்பட்டமையால், கற்பாறைகள் ஒழுங்கின்றி உடைந்து, சிதறி சிறிதளவே நீர் ஊறுகிறது. அதில், 'முகவை'- எனும் மரத்தால் செய்த, நீர் முகக்கும் கருவி ஒரு நீளமான கயிற்றால் பிணைக்கப்பட்டு, நீர் இறைக்கப்படும் காட்சி விளக்கப்படுகிறது. இங்குள்ள பத்தல் எனும் சொல் கவனத்துக்குரியது. இதை, 'உட்கிணறு' எனக் கொள்ளலாம். மேலே அகலமாக அகழ்வதைக் 'கூவல்'- என்றும் அக்கூவலுக்குள்ளே ஆழமாய் அகழ்வதைப் 'பத்தல்'- என்றனர். இது கொங்குப் பகுதியில் 'பிள்ளைக் கிணறு'- என்று அழைக்கப்பட்டது.

— இதுதவிரத் தமிழகத்தின் பிறபகுதிகளில், குளம் ஏரிக்கு நடுவில் அமைந்த கிணற்றுக்கும், "பிள்ளைக் கிணறு"- என்ற பெயர் இருந்தது.

— மணற்பாங்கான இடங்களில், குறிப்பாகச் சோழநாட்டின் ஆற்றுப்பகுதிகளில் அமைக்கப்பட்ட கிணறுகள், "உறைக்கிணறு"- என்றழைக்கப்பட்டது.

— மணலில் தோண்டுவது எளிதன்று. மணல் சரிந்துக்கொண்டே இருக்கும். களிமண்ணால் வட்டைகள் செய்து சுட்டு, அவற்றை உறைகளாகப் பயன்படுத்தியுள்ளனர். மேற்பகுதி மண்ணைத் தோண்டியெடுத்துவிட்டு, மணல் பகுதியில் வட்டையை வைப்பர். வட்டையின் உட்பக்கமுள்ள மணலை தோண்டியெடுப்பர். உறை கீழே இறங்கும். பின் அடுத்த உறையை வைப்பர். உறையின் வாய்ப்பகுதி சற்றே பெரிதாகவும், வால்பகுதி அதனுள் செல்லுமாறும் இருக்கும். பின் உறைக்குள் இருக்கும் மணலை தோண்டுவர். இவ்வாறு தொடர்ந்து தண்ணீர் சுரக்குமளவுக்குப் பல உறைகளை இறக்கிக் கொள்வர்.

இவ்வாறு, பல வகையான கிணறுகள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன.

— "கிணறு"- என்று பொருள் தரும் சொற்களுக்குத் தமிழில் வறுமையில்லை.

— பாறையைக் குடைந்து செய்யும் குடைக்கிணறு, "குமிழி"- எனப்பட்டது.

— சரளை நிலத்தில் வெட்டப்பட்டுச் சுற்றிலும் கல் மற்றும் செங்கல்களால் அகச்சுவர் கட்டிய கிணறு, "கட்டுக்கிணறு"- எனப்பட்டது.

— "கேணி"- என்றால், ஆழமும், அகலமும் உள்ள பெருங்கிணறு.

— கடலருகே தோண்டிய கிணறு, "ஆழிக்கிணறு." கடற்கரை ஓரங்களிலும், திருச்செந்தூர் கோவிலருகிலும் இதைக் காணலாம்.

— இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளுடன் அமைந்த பெருங்கிணறு, "நடைகேணி"- ஆகும். இதன் மாதிரிகளைக் கங்கை கொண்ட சோழபுரம், திருவிடைமருதூர் கோவில்களில் காணலாம்.

— ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு, "பொங்கு_கிணறு"- ஆகும். அதாவது, ஆர்ட்டீசியன் கிணறு. (ஆர்ட்டீசியன் ஊற்றுக்கு, "
குமிழி ஊற்று"- என்ற பெயரும் உண்டு)

— "பூட்டைக்_கிணறு"- என்பது கமலை நீர்ப் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறாகும்.

— ஏற்றம் வைத்து நீர் பாய்ச்சும்போது ஏற்றம், குற்றேற்றம், நெட்டேத்தம், கூடையேற்றம், பெட்டி இறைப்பு, கமலை, ஆளேற்றம் என இவற்றில் பலவகைகள் இருந்தன.

— கோடையில், ஆற்றில் அல்லது ஆற்றங்கரையில் அவ்வப்போது தோண்டப்பட்ட கிணறு, "தொடுகிணறு"- எனப்பட்டது.

— காவிரி கடைமடைப் பகுதியில் ஆற்றோரத்தில் தோண்டப்பட்டுக் காய்கறி பாசனத்துக்குப் பயன்பட்ட கிணற்றை, "துலவாக்குழி"- என்பர். துலவம் என்பது ஏற்றத்தில் பயன்படும் நீண்ட மரத்துண்டைக் குறிக்கும்.

Address

Kanthasamy Vivasaya Pannai-thangamedu
Tenkasi
627814

Telephone

9994701124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri vigneshwara agro farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri vigneshwara agro farm:

Share

Category