13/06/2026
#சிவப்புசிந்தி_பசு_பற்றிய_தகவல்LF
🐄🐃🐂🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿
சிவப்பு சிந்தி எனப்பவை நாட்டு மாட்டுஇனங்களில் ஒன்றாகும்.
இந்த மாட்டினம் பாக்கித்தானின் சிந்து மாகாணப் பகுதியைச் சேர்ந்தவை.
இவை பரவலாக பால் தேவைக்காக பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், இலங்கை மற்றும் பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.
இவை பல நாடுகளில் ஐரோப்பிய பால் மாடுகளுடன் இனக்கலப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இவை இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளில் ஜெர்சி இனப்பசுக்களுடன் இனக்கலப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
சிவப்பு சிந்தி மாடுகள் சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் குறுகிய கொம்புகளுடன் காணப்படும்.
சிந்தி மாடுகளில் வெள்ளை சிந்தி அல்லது தார்பார்க்கர் என்ற இன்னொரு வகையும் உண்டு.
தார்பார்க்கர் பசு பற்றிய தகவலை இன்னொரு பதிவில் நிச்சயம் பார்க்க முடியும்.
இதன் எடை 300 தொடக்கம் 350 கிலோ வரை வளரும்.
பாசமாக மனிதர்களோடு பழகும் குணம் கொண்டவை.
பால் கறப்பது எளிது. அதாவது முரண்டு பிடிப்பது இல்லை.
இந்த மாடுகள் சஹிவால் போன்று இருக்கும் வெப்பமான சூழலிலும் வாழ பழகிக் கொண்டவையாகும்.
சிறிய அளவிலான பண்ணைகளில் அதிகம் வளர்க்கப்படும் பசுக்களில் இதுவும் ஒன்றாகும்
பிறந்த கன்றுகள் சுமார் 28 மாதங்களில் பருவ வயதை அடைகின்றன.
இந்த இன மாடுகளின் ஆயுட்காலம் சுமார் 14 ஆண்டுகள்.
சுமார் 10 கன்றுகள் வரை ஈனும்.
ஒவ்வொரு கன்றுக்கும் இடையிலுள்ள தூரம் 14 மாதங்கள் வரை ஆகும்.
நாம் அளிக்கும் தீவனத்தை பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் 7 முதல் 10 லிட்டர் பால் சாதாரணமாக கறக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
இதன் பாலில் நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து அதிகமாகவே உள்ளது
மேலும். உங்களுக்கு தேவையான வேறு கட்டுரையின் தலைப்பினை அல்லது உங்கள் அபிப்பிராயத்தை இப்பதிவில் கமெண்டில் பதிவிடுங்கள்
அதற்கேற்றாற்போல் கட்டுரைகளை நாங்களும் பதிவிடுவோம்
மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784
WhatsApp:0769196445
Laxci Farm
077 023 9784
https://maps.app.goo.gl/WDx5Kivndezb6WAj8
நன்றி...
Laxci Farm.