Mullaitivu & Mallavi Surprise Gift

Mullaitivu & Mallavi Surprise Gift Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mullaitivu & Mallavi Surprise Gift, Food Delivery Service, Kilinochchi.

JBL Party Box 310 For Rent with MicHighlights▶️Bluetooth Wireless Technology▶️Up to 240W RMS Output▶️18-Hour Rechargeabl...
31/10/2023

JBL Party Box 310 For Rent with Mic

Highlights
▶️Bluetooth Wireless Technology
▶️Up to 240W RMS Output
▶️18-Hour Rechargeable Battery Built-In
▶️USB Playback and Device Charging
▶️IPX4 Splashproof Design
▶️Bluetooth Stereo Pairing
▶️Built-In Party Lighting around Speaker
▶️Integrated Wheels and Telescoping Handle

Per Day with Out Mic Rs.6,000
Per Day with Mic Rs.8,000

▶️Contact : 0770608727 / 0706807162

09/04/2023

திருக்கோணேச்சரர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.!

பாஸ்போட் பெற ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்தல்.பாஸ்போட் பெறுவதற்கு ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்வது எப்படி எனத் தெரியாமல் பலர...
04/04/2023

பாஸ்போட் பெற ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்தல்.

பாஸ்போட் பெறுவதற்கு ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்வது எப்படி எனத் தெரியாமல் பலர் தடுமாறுகின்றனர். ஆங்கில மொழி தெரிந்தோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தற்போதுகொழும்பு,வவுனியா,மாத்தறை,
குருணாகல்,கண்டி ஆகிய அலுவலகங்கள் ஊடாக ஒரே நாளில் கடவுச் சீட்டுப் பெறலாம். அதே போலச் சாதாரண முறையிலும் கடவுச் சீட்டைப் பெறலாம்.

அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரூடியோ மூலமாக புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.அப் புகைப்படத்தை பாஸ்போட் பெறுவதற்காக ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்த பிரிண்டை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

இப் புகைப்படம் எடுக்கப்பட்டு 90 நாள்களுக்குள் பதிவு செய்து பாஸ்போட் பெற்று விடல் வேண்டும்.இல்லாவிடில் திகதி காலாவதியாகி விடும்.

மீண்டும் புதிதாகவே புகைப்படம் எடுத்தல் வேண்டும்.

ஒன்லைன் மூலமான பதிவு ஒரு நாளில் எந்த நேரத்தில் செய்யலாம் என்பது தொடர்பாகத் தெளிவான நடைமுறை இல்லை.

திணைக்களத்தின் சேவர் எப்போது பதிய விடும் என்பது தெளிவற்ற நிலை.

பதிவு செய்ய https://www.immigration.gov.lk/pages_e.php?id=38 எனும் இணைப்பிற்குள் முதலில் பிரவேசியுங்கள்.

பின்னர் அங்கு Appointment for online Passport service என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
;.https://eservices.immigration.gov.lk:8443/appointment/pages/reservationApplication.xhtml எனும் புதிய இணைப்பு வரும்.

01.அதில் Application type எனும் தெரிவு இருக்கும்.
One day service , Normal service என இரு தெரிவு வரும். ஒரே நாள் சேவைக்கு 20 000 ரூபா கட்டணம்.
சாதாரண சேவைக்கு 5000 ரூபா கட்டணம். இச் சேவையின் மூலமாக விண்ணப்பித்தால் நான்கு மாதங்களில் தான் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆகவே உங்கள் வசதிக்கேற்ற தெரிவைச் செய்யுங்கள்.தெரிவு செய்து விண்ணப்பித்து அங்கீகாரம் பெற்ற பின்பாக மாற்ற முடியாது.

02. குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் எந்த அலுவலகம் ஊடாகக் கடவுச்சீட்டைப் பெற

விரும்புகிறீர்கள் என்ற தெரிவு இரண்டாவதாக வரும்.
அதில் Preferred location எனும் தெரிவின் கீழ்
Head office Bataramulla
Matara branch, Kandy branch, Vavuniya branch, Kurunagala branch ஆகியவை வரும் அதில் உங்களுக்கு போக்குவரத்துச் செய்ய வசதியான அலுவலகத்தைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

03.Photo acknowledge number எனும் விடயம் வரும். அதில் 000 எனத் தொடங்கி 10 இலக்கங்களுள்ள இலக்கத்தைப் பதிவு செய்ய வேண்டும். இந்த இலக்கம் நீங்கள் புகைப்படம் எடுத்த அங்கீகரிக்கப்பட்ட ஸ்ருடியோ பாஸ்போட்டுக்காக உங்கள் படத்தை ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்து தந்த துண்டில் உங்கள் புகைப்படத்தின் தலைக்கு மேலே Reference No. என்பதற்குப் பக்கத்தில் உள்ள இலக்கமாகும்.
ஸ்ரூடியோ போட்டோ பிரிண்ட் இலக்கத்தைப் பதிவு செய்தல் வேண்டும்.

அந்தப் பிரிண்டில் வலது பக்கமாக மேலே உள்ள 000 எனத் தொடங்கி வரும் இலக்கங்களைப் பதிவு செய்தல் வேண்டும்.

04. Applicant Name அடுத்ததாக உங்கள் பெயரை ஆங்கில கப்பிற்றல் எழுத்துகளில் முதல் எழுத்தை இட்டு அதன்படி பதிவு செய்ய வேண்டும். வழமையாக நீங்கள் ஆங்கில மொழியில் எழுதும் எழுத்துகளையே போட்டோ எடுத்த ஸ்ரூடியோவுக்குக் கொடுத்தல் வேண்டும்.

ஸ்ரூடியோ பதிவுத் துண்டிலுள்ளவாறு பெயரைப் பதிவு செய்யுங்கள்.

05. Date of birth உங்கள் பிறந்த தேதியை அடுத்த கூட்டில் பதிவு செய்யுங்கள். திகதி முதலாவதாகவும், மாதம் அடுத்ததாகவும் இறுதியில் ஆண்டும் இருக்கும்.

https://youtube.com/

06. உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவு செய்யுங்கள். பழைய இலக்கமாயின் 09 இலக்கங்களின் இறுதியில் ஆங்கில எழுத்து வி அல்லது எக்ஸ் என்பதையும் பதிவிடல் வேண்டும். புதிய இலக்கமாயின் 12 இலக்கங்கள் பதிவு செய்தல் வேண்டும்.

07. Mobile No. பத்து இலக்கமுள்ள .உங்கள் கைத்தொலைபேசி இலக்கத்தைப் பதிவு செய்தல் வேண்டும்.

08. Appointment date எனும் இடம் அடுத்தது. தற்போதுள்ள மாதம் இருக்கும். அதன் வலது பக்க மேல்
மூலையில் கிளிக் செய்யும் போது பதிவு செய்வதற்கான வெற்றிடமுள்ள மாதத்தை நோக்கி நகரும். பதிவு செய்வதற்கான மாதம் அடுத்து இருக்கும்.

மாதத்தின் நிறைவு நாள் மட்டும் திகதிகள் முழுமையாக வட்டமாக இருந்தால் திகதி முழுவதும் பதிவு செய்யப்பட்டு விட்டது என்ற கருத்து.

மாதம் காட்டும் அந்தப் பக்கத்தின் மேல் மூலையில் கிளிக் செய்தால் அடுத்த மாதம் இருக்கும்.அதனையும் கிளிக் செய்தால் அடுத்த மாதம் வரும்.

நான் மார்ச் 17 ஆம் திகதி வவுனியா அலுவலகம் ஊடாக ஒரே நாள் பாஸ்போட்டுக்கு விண்ணப்பித்த போது மே 10 ஆம் திகதி மட்டுமே பதிவு செய்ய முடிந்தது.

சாதாரண பாஸ்போட் விநியோகத்திற்கு யூன் 08 ஆம் திகதி வரையும் இருந்தது.

ஒரே குடும்பத்தில் 04 அல்லது 05 பேருக்குப் பாஸ்போட் எடுக்க விண்ணப்பம் செய்வதாயின் தரவுகளைத் தட்டச்சு செய்து முன்னாயத்தம் செய்து கொள்ளுங்கள். லப்ரொப் அல்லது பிசி ஆயின் வேறு வேறு ரூல்பார் திறந்து வைத்திருந்து தரவுகளைத் தட்டச்சு செய்து ஆயத்தம் செய்து வையுங்கள். சேவர் பதிய விடும் போது தான் பதிவு செய்யலாம்.

24 மணித்தியாலம் உள்ள ஒரு நாளில் எப்போது செய்யலாம் என்பதற்கு நிச்சயமில்லை. ஆனால் ஒரு நாளில் ஒரேயொரு திகதியை மட்டும் அனுமதிப்பார்கள்.

09. சரியான திகதியைத் தெரிவு செய்த பின்பாக கீழே பதிவு நேரவலயமாக 04 நேரங்கள் சிவப்புப் பெட்டிகளில் காட்டும்.

அதில் காலை 8.00 மணி நேரவலயத்தைத் தெரிவு செய்யுங்கள். அது இல்லையேல் அடுத்த 09 மணி நேரவலயத்தைத் தெரிவு செய்யுங்கள். இல்லாவிட்டால் அடுத்து வரும்

நேரவலயங்களைத் தெரிவு செய்யுங்கள்.
ஆனால் பாஸ்போட்டை நீங்கள் நேரடியாகப் பெறச் செல்லும் போது முதலில் வருபவருக்கே முதலில் வழங்குவார்கள்.

10. I had read and agree to this instruction எனும் சொற்றகள் வரும்.
பதிவுகள் எல்லாம் சரியாயின் இப் பதிவுக்கு நான் உடன்படுகிறேன் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு முன்பாக உள்ள பெட்டியில் சரி அடையாளத்தை இடுங்கள்.

அதன் பின்பாக Convert என்ற தெரிவை கிளிக் செய்யுங்கள்.Reset எனும் தெரிவைச் செய்ய வேண்டாம். செய்தால் உங்கள் பதிவுகள் யாவும் அழிந்து திரும்பவும் பதிவு செய்ய வேண்டும்.

11. அதன் பின்னர் உங்களது பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்ட தகவல் டவுண்லோட் செய்யுமாறு வரும். அதனை டவுண் லோட் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது ஈமெயிலில் சேமித்துக் கொள்ளுங்கள

12. உங்களது கைத்தொலைபேசி இலக்கத்திற்கும் பதிவு இலக்கம் குறுந்தகவலாக வரும். அதனையும் ஒரு துண்டில் எழுதிப் பாதுகாப்பாக வையுங்கள். ;.இத்துடன் யாவும் நிறைவு பெற்று விடும்.

13. ஒருமுறை விண்ணப்பம் செய்து பதிவு அங்கீகரிக்கப்பட்டால் அதில் எந்த வித மாற்றங்களையும் செய்ய முடியாது.

உங்களுக்கென ஒதுக்கப்பட்ட நாள் முடிவடைந்த பின்பே புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும். உங்கள் வசதிக்கேற்ற தெரிவுகளை மேற்கொள்ள முடியும்.

14. ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்து விட்டு நேரடியாக நீங்கள் சென்று பாஸ்போட்டைப் பெறலாம். எந்தத் தரகரது உதவியும் தேவையில்லை. பாஸ்போட் பெறுவதற்குரிய ஆவணங்களையும் கட்டணத்தையும் கொடுத்து நேரடியாகப் பெற முடியும்.

KMT SOFAதமிழனின் தயாரிப்பு. எமது மண்ணில் உற்பத்தி செய்யப்படும் இந்த உற்பத்திகள் என்னை போன்ற சிறிய உற்பத்தியாளர்களையும், ...
29/03/2023

KMT SOFA
தமிழனின் தயாரிப்பு.

எமது மண்ணில் உற்பத்தி செய்யப்படும் இந்த உற்பத்திகள் என்னை போன்ற சிறிய உற்பத்தியாளர்களையும், என்னை சார்ந்து இருப்பவர்களையும், எமது சூழலையும் ஆக்கபூர்வமான பாதையில் வழி நடத்தி செல்லும். அதனால் நீங்கள் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதால் எனது வியாபாரத்தின் சிறந்த முதலீடு என்று நம்புகிறேன்.
விலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதால் விலை பதியப்படவில்லை.
அத்துடன் வேறு நிறங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு மேலேயுள்ள வாட்ஸ்அப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
வவுனியா, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு என்பவற்றிற்கு இலவச வினியோக சேவை வழங்கப்படும்.

KMT SOFA+94775102378

பெற்றோல் டீசலுக்கும்  கேஸுக்கும் பத்து நாட்கள் பாயும் தலையணையோடு தெருவில் படுத்திருந்த அனுபவங்களை இலகுவில் மறந்துவிடாதவர...
23/03/2023

பெற்றோல் டீசலுக்கும் கேஸுக்கும் பத்து நாட்கள் பாயும் தலையணையோடு தெருவில் படுத்திருந்த அனுபவங்களை இலகுவில் மறந்துவிடாதவர்களுக்கு இது வெடிகொளுத்தி கொண்டாடக்கூடிய வெற்றிதான்.

நாட்டின் வங்குரோத்து நிலையால் தொழில் இன்றி பட்ட கடனை அடைக்க வழியின்றி தூக்கில் தொங்கியவர்கள் எண்ணிக்கை அறிந்தால் நீங்களும் கொள்வீர்கள் மகிழ்ச்சி இனியொரு தற்கொலை நடக்காதென்று...

மருந்துப்பொருட்கள் இறக்குமதிக்கு டொலர் இன்றி மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த வைத்தியசாலைகள்...

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி தடையால் அல்லாடிய பொதுமக்கள்...

விவசாயம் செய்ய உரமின்றி வயிற்றில் பசியோடு வீதியில் நின்ற விவசாயிகள்.

அடுத்த மாதம் சம்பளம் கிடைக்குமா என அச்சத்தோடு நின்ற அரச ஊழியர்கள்...

மாவுக்கு வரிசை, மண்ணெண்ணைக்கு வரிசை, மருந்துக்கு வரிசை, அவ்வளவு ஏன் இறந்துபோனவர்களை எரிக்ககூட வரிசை எங்கும் வரிசை எதிலும் வரிசை...

சாமனியர்கள் அத்தனைபேருக்கும் IMF உதவி வெடி கொளுத்தி கொண்டாடப்படவேண்டிய வெற்றிதான் அதைப்பெற நடவடிக்கைகள் எடுத்தோரிற்கு நன்றிகள்🙏
Copy-today

Blc House𝐓𝐚𝐦𝐢𝐥 𝐕𝐨𝐠𝐮𝐞  தமிழ் வோக்
22/03/2023

Blc House
𝐓𝐚𝐦𝐢𝐥 𝐕𝐨𝐠𝐮𝐞 தமிழ் வோக்

சோபா என்று ஒரு சகோதரி. கிளிநொச்சி முழங்காவில் நகரில் வசிக்கிறார். 2007 ஆம் ஆண்டு யுத்தநடவடிக்கையில் காயமடைந்தவர். பின்னர...
21/03/2023

சோபா என்று ஒரு சகோதரி. கிளிநொச்சி முழங்காவில் நகரில் வசிக்கிறார்.

2007 ஆம் ஆண்டு யுத்தநடவடிக்கையில் காயமடைந்தவர். பின்னர் தடுப்பு முகாமில் இருந்து, 2010 இல் விடுதலையானவர். இவரது கணவரும் யுத்தத்தில் காயமடைந்து, ஒரு கை முற்றாகச் செயலிழந்தவர். இருவராலும் பெரியளவு தொழில் முயற்சிகளில் ஈடுபடமுடியாது. உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காது.

ஆனாலும் அவர்கள் சோர்ந்துபோகவில்லை.

தன்னிடமிருந்த வெறும் 1500 ரூபாவைக் கொண்டு, மரவள்ளிக் கிழங்குகள் வாங்கி, அவற்றைப் பொரித்து, பையில் அடைத்து விற்க ஆரம்பிக்கிறார் சோபா. அதில் வந்த வருமானத்தைக் கொண்டு, மிக்‌ஷர், பக்கோடா, இறால் வடை, இறைச்சிச் சரக்கு என்று மேலும்பல பொருட்களை உற்பத்தி செய்கிறார்.

இவரிடம் ஒரு சிறிய மோட்டார் சைக்கிள் உண்டு. அதில் உற்பத்திப் பொருட்களைப் பெட்டியாகக் கட்டி, தானே கடைகளுக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்துகிறார். நாளாக நாளாக தொழில் விரிவடைந்து செல்கிறது. தமது தொழிற்சாலைக்கு ‘டயானா சிறுகைத் தொழிலகம்’ என்று பெயர் சூட்டுகிறார். பாடசாலை செல்லும் இவரது தம்பியும் பகுதிநேரமாக அக்காவுக்கு உதவுகிறார்.

தானே பொருட்களை எடுத்துச் சென்று கடைகளில் சந்தைப்படுத்த சோபா வெட்கப்படவில்லை. “இன்ன இன்ன தொழில்களைச் செய்தால் கௌரவம், இன்ன இன்ன தொழில்களைச் செய்தால் கௌரவம் இல்லை” என்று இலங்கையில் ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலை இந்தச் சகோதரி கிழித்து எறிகிறார்.

செய்யும் தொழிலே தெய்வம்..!

இன்று சகோதரி சோபாவின் தொழிற்சாலையில் 7 பேருக்கு வேலைவாய்ப்புக் கொடுத்திருக்கிறார். தானும் முன்னேறி, அடுத்தவர்களையும் முன்னேற்ற நினைக்கும் இவருக்கும், இவரது கணவருக்கும் வாழ்த்துக்கள்.
Copy-vanni adv

Address

Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mullaitivu & Mallavi Surprise Gift posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share