CN FARM

CN FARM just farm

10/12/2025

நாட்டுக் கோழிவளர்ப்பில் அதிக குஞ்சுகளைப் பெற இந்த வழிகள் உதவும்…

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும்.

இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும். கோடைக்காலங்களில் இடப்படும் முட்டைகளை, முட்டைகள் இடப்பட்டு நான்கு நாட்கள் வரையிலும் குளிர்காலங்களில் 5 முதல் 7 நாட்கள் வரை இடப்பட்ட முட்டைகளையும் ஒன்றாக அடைக்கு சேர்த்து வைத்து குஞ்சு பொரிக்க பயன்படுத்தலாம்.
இதற்கு மாறாக 10 நாட்களுக்கு முன் போட்ட முட்டைகளை இன்று போட்ட முட்டைகளுடன் இணைத்து அடைக்கு வைத்தால் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன் இட்ட முட்டைகளில்இருந்து குஞ்சுகள் வெளிவராது. இயற்கையில் கோழிகளின் மூலம் அடைகாத்தல் செய்யும்போது குறைந்த நாட்கள் இடைவெளியில் முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சுகள் அதிகம்பெற விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும்.

பொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21 நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம், அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பது, அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும்.

அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது.

அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை. மாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால் தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும்.

இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால் குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது.
எனவே இயற்கை முறையில் அடைக்கோழி மூலம் குஞ்சு பெறும் போது அடைக்கோழிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் அடைக்கு உட்கார பயன்படுத்தும்போது பகலில் உட்கார வைக்கும் கோழிகளிடமிருந்து கிடைக்கும் குஞ்சுகளைவிட இரவில் கோழியை உட்காரவைத்து பெறப்படும் குஞ்சுகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே இயற்கை முறை அடைகாத்தலில் அடைக்கோழிகளை அடைகாத்தலுக்கு பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் காலமும் முட்டை குஞ்சு பொரிப்புத்திறன் அதிகரிக்க காரணமாக உள்ளது.

பேண், செல் பாதிப்பு இருந்தால் பியூடாக்ஸ் என்ற மருந்தினை 2 மிலி மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து கோழிகளின் தலையைத் தவிர மற்ற பாகங்களை மருந்து கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் விடவேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் பேண், செல் பாதிப்பினால் ஏற்படும் அரிப்பு, நமச்சல் குறைந்து நல்ல நலத்துடன் அடைகோழிகள் அடையில் அமர்ந்து குஞ்சு பொரிக்க முடியும்.
சாம்பல் தொட்டி வைத்தாலும் அதில் மண் குளியல் மூலமும் பேன் பதிப்பினை குறைக்கலாம் .

நாட்டுக்கோழிகளில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் பெற 21 நாட்கள் ஆகிறது. நாம் வைத்துள்ள முட்டைகளில் கருக்கூடாமல் கூமுட்டைகளாக எத்தனை உள்ளன என்பதை முட்டை அடை வைத்த 7 நாட்களில் கருமுட்டை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு தேவையானவை ஒரு டார்ச்லைட் அல்லது மின்சார பல்பு, ஒரு அட்டை. கருமுட்டையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு இருட்டு அறையில் ஒரு அட்டையில் முட்டை போகும் அளவிற்கு ஓட்டை போட்டு முட்டையின் அகலமான பகுதி மேலாகவும் கூம்பு வடிவமான பகுதி கீழாக வரும்படி நெட்டு வசமாக வைத்து கீழ்புறத்தில் இருந்து விளக்கு வெளிச்சம் கொடுக்கும்போது முட்டையில் கருக்கூடியிருந்தால் முட்டையின் மேற்பகுதியில் வளர்ச்சி அடைந்த கருவின் தலை கரும்புள்ளியாக இருக்கும்.

​🥚 Ways to Increase Chick Production in Native Chicken Farming 🐔

​To get more chicks from native chickens, a ratio of one rooster to five hens (5:1) should be maintained when mating and raising the flock.
​When raised in this manner, fertilization occurs easily once the rooster mates with the hen, increasing the chances of getting a large number of fertile eggs.
​Conversely, if the hen-to-rooster ratio is 10:1, the hatching rate will decrease.
​Managing Eggs for Incubation
​Summer: Eggs laid over a period of up to four days can be collected and used together for incubation.
​Winter: Eggs laid over a period of five to seven days can be used together for incubation.
​If eggs laid 10 days ago are set for incubation along with freshly laid eggs, the older eggs will not hatch within the specified period. Farmers should strive to use eggs laid within a short interval when using natural brooding methods to maximize chick production.
​Optimizing the Brooding Period
​Generally, in rural areas, native chickens roam freely during the day and are housed at night. Therefore, when selecting a hen for brooding and placing her on the eggs, the broody hen remaining on the nest for extended periods and avoiding frequent departures throughout the 21-day incubation period will lead to a higher number of chicks.
​When the broody hen develops a sense of motherhood, recognizing that her own chicks are growing inside the eggs, she is less likely to leave the nest frequently and will sit on the eggs for longer hours each day.
​The best time to start brooding is in the evening (twilight). Since the hen is accustomed to staying in one spot overnight, she will naturally sit on the eggs for 12 continuous hours during the first night. This reinforces her maternal instinct and the intention to brood the eggs properly.
​Consequently, hens set for brooding in the evening do not leave the eggs as often during the 21-day brooding period. Conversely, if a hen is set for brooding for the very first time in the morning, her desire to eat (feed) is higher, and she will frequently leave the nest and return throughout the 21-day period.
​This frequent departure of the broody hen disturbs the temperature and humidity necessary for the chick's development, leading to chick mortality and a lower overall hatch rate.
​Therefore, when using the natural brooding method, setting broody hens on the nest in the evening or night is likely to yield more chicks than setting them in the morning. The timing chosen for selecting and setting the broody hen significantly impacts the chick hatching rate in natural brooding.
​Controlling Lice and Mites
​If the hen is affected by lice or mites, use a medicine like Butox by mixing 2 ml of the medicine in one liter of water. Dip all parts of the chicken's body, except the head, into the medicated water and then release her into the sun. This reduces the itching and irritation caused by the pests, allowing the broody hen to sit comfortably and successfully hatch the chicks.
​Setting up an ash pit where chickens can take a dust bath (sand bath) can also help reduce lice infestations.
​Identifying Infertile Eggs (Candling)
​It takes 21 days for chicks to hatch from native chicken eggs. Farmers can identify how many eggs are infertile (i.e., 'wind eggs' or 'yolk eggs') by performing an egg candling test seven days after the eggs are set for incubation.
​What you need: A flashlight or electric bulb, and a piece of cardboard.
​Hold the egg in your hand in a dark room.
​Make a hole in the cardboard just big enough for the egg to fit.
​Place the egg upright, with the broad end facing up and the narrow, conical end facing down.
​Shine the light from the bottom.
​If the egg is fertile, the developing embryo's head will appear as a dark spot near the top of the egg.

Address

Thampalakamam
Trincomalee
31046

Website

Alerts

Be the first to know and let us send you an email when CN FARM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category