04/02/2026
செந்தூலில் ஜொலித்த தங்க ரதம்: கயல் சூப்பர்மாட் வழியாக பவனி வந்த முருகப்பெருமான்!
மலேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பத்துமலை முருகப்பெருமானின் தங்க ரதம் செந்தூல் நகரை கடந்து சென்ற காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்தது.
குறிப்பாக, செந்தூல் 'கயல் சூப்பர்மாட்' (Kayal Supermart) வழியாக தங்க ரதம் பவனி வந்தபோது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "வேல் வேல் முருகா" என முழக்கமிட்டு வரவேற்றனர்.
கயல் சூப்பர்மாட் வழியாக இறைவன் உலா வந்த இந்தத் தருணத்தை சிறப்பிக்கும் வகையில், கயல் சூப்பர்மாட் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இணைந்து சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தங்க ரதத்தில் வீற்றிருந்த முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
அத்துடன் அங்கு கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் 'கயல் விபூதி' மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் இறைவனின் அருட்பிரசாதத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
இந்த ஆன்மீக நிகழ்வை திரு. செந்தூல் விஜி அவர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இந்த பக்திமயமான நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரு. டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள் கலந்து கொண்டார். அவர் பக்தர்களுடன் இணைந்து தேர் பவனி நிகழ்வை சிறப்பித்தது விழாவிற்கு மேலும் மெருகூட்டியது.
எங்கள் கயல் சூப்பர்மாட் வழியாக முருகப்பெருமானின் தேர் பவனி வந்த இந்த தருணம் எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.
இந்த நிகழ்வை இவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைத்த திரு. செந்தூல் விஜி அவர்களுக்கும், தனது வருகையால் எங்களை உற்சாகப்படுத்திய திரு. டத்தோ எம்.சரவணன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகா!